பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவுகள் வந்தாச்சு.
அவங்க செயிப்பாங்கன்னு தெரியுமப்பா, அது எதிர்பார்த்த்துதான. திமுக ஜெயிக்கும் என்றுதான் நான் அப்பவே சொன்னேனே என எல்லோரும் சொல்கிறார்கள். என்றாலும் இந்த முடிவில் யாருமே எதிர்பார்க்காதது இரண்டு நிகழ்ந்திருக்கிறது.
ஒன்று. அதிமுக வின் டெப்பாஸிட் காந்தி கணக்கில் எழுதப்பட்டதும், சீனியர் கட்சிகளால் தீண்டாமை அறிவிக்கப்பட்ட பா.ம.க. ரேஸில் இரண்டாம் இடத்திற்கு வந்ததும்.
இது எப்படி நடந்தது, அதிமுக தேர்தல் பணி சுணக்கம், அது வன்னியர் இடுப்புப் பட்டை (பெல்ட்), விஜயகாந்த் கலகல என எத்தனை காரணங்கள் நாம் கேட்டாலும் தெளிவான ஒரு காரணத்தை சொல்ல முடியவில்லை. என்றாலும் இத்தனைக்கும் காரணமானவர் ஒருவர் உண்டு.
அவர் சாமான்யன்தான், ரேஷன் கடை கியூவில் 5 வதாய் நின்று கொண்டிருக்கிறார். பொதுஜனம்.
ஹலோ... மிஸ்டர் பொதுஜனம், உங்களப்பத்தி தான் ஊரு உலகம் எல்லாம் பேச்சு. காசு வாங்கிகிட்டு நீக்க ஓட்ட விக்கிறீங்கன்னு. நீங்க காசு வாங்குறீங்க, அது சட்டப்படி குற்றம். அநேகமா இது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நம்புறோம்.
வாங்கின காசுக்கு சூடம் அடிச்சு சத்தியம் செஞ்சு உங்களுக்குத்தேன் ஓட்டுப் போடுறேன் என சொல்லிவிட்டு ரகசிய ஓட்டளிப்பு தானே செய்கிறீர்கள். அட்டைப் பெட்டி தடுப்புக்கு பின்னால போய், அமுக்குறது நீங்கதான.
சாமிக்கும் சத்தியத்துக்கும் கொடுக்குற மருவாதைய, நம்பிக்கைய நம்ம சட்ட்த்துக்கும் எப்போ கொடுப்பீங்க. ஒரு நாள் வாங்குற காசுல எவ்வளவு காலம் வண்டியோட்டலாம். மனசாட்சிக்கு வஞ்சகமில்லாம வாங்கின காசுக்கு ஓட்டு போடுறீங்க என சில அரசியல் கட்சிகள் சொல்லுது. ஆனா மெய்யாலுமே அங்கனக்குள்ள என்ன நடக்குதுன்னு என்னைப் போல பொது ஜனத்துக்கு தெரியவே இல்லை. உங்கள பத்தி விளக்கமா விவரமா சொல்ல ஒரே ஒருத்தருக்கு முடியும்ன்னு நம்புறோம். ம்... அவரு பேர நாம சொல்றதுக்கு நமக்கு இல்லீங்களே அஞ்சாத நெஞ்சம்.
அங்கய்க்கும் இங்கய்க்கும்மா கட்சி தாவி தாவி ஜம்பு அரசியல் பண்ணுற ஐயாகுட்டிய போன தேர்தல்ல தோக்க வைச்சீங்க. இப்ப, . தைலாபுரம் விட்டு போயஸ் வரை போயி பேரம் பேச வைச்சிட்டீங்க. தோள்ல துண்ட மாட்டிக்கிட்டு தோட்டம் தோட்டமா போப்போறாரு
யம்மா, தாயி, இது உங்களுக்கே நல்லா இருக்கா, காச வாங்கிகிட்டு வாக்களிக்கிறார்கள் என எத்தனை காலம் சொல்லப் போகிறோம்.
குலை குலையா மந்திரிக்கா, கொள்ள அடிச்சவன் எங்க இருக்கான் கோபால புரத்துல குடியிருக்கான்ன்னு கும்மியடிச்சிக்கிட்டு ஒரு கூட்டம் உங்க பின்னால வந்துச்சு. ஆனா நீங்களோ,
குத்தடி குத்தடி ஜைலக்கா, குனிஞ்சு குத்தடி சசியக்கா, தொங்குதைய்யா டோலாக்கு, லீவு விடுறா கட்சிக்குன்னு அரசியல் பண்ணாம ரெஸ்ட் எடுக்குறீங்க.
ஜாதகம் ஜோசியம்ன்னு நம்பிக்கிட்டு, நம்ப வேண்டிய நல்ல தலைவர்கள மதிக்காம மிதிச்சா எப்படி. ரூட்ட மாத்துங்க, நிர்வாக திறமையும், ஆளுமையும் நிறைந்த தங்களை மூட நம்பிக்கையும், மனித நம்பிக்கையின்மையும் முடக்கலாமா.
நாட்டு நலனில் அக்கறையும், தொலை நோக்கு பார்வையும், ஆளுமையும், அன்பும் கொண்ட ஒரு தலைவன் நமக்கு கிடைப்பாரா.
பென்னாகரம்.... இடைத்தேர்தல்... திமுக... அதிமுக... பாமக.. தேமுதிக.. குவாட்டர்.. பிரியாணி...பண விநியோகம்.. சாமி மேல சத்தியம்.... பகுத்தறிவு.... ராகு கால பூஜை.. வெளியேவே வராத “தல” தொகுதி விசிட்... கொடநாடு அம்மையார் கூச்சல்.... கேப்டன் கர்ஜனை... பாமக புலம்பல்...
பதிலளிநீக்குஏழை பாழைகள்... கும்பல்... கவர்ச்சி பேச்சு... வாய்ஜால வார்த்தை...வாய்க்கரிசி... திமுக வெற்றி....
வேறென்ன சொல்ல!!!???
நச்சுன்னு கருத்து சொல்லீட்டீங்க. "குலைகுலையா முந்திரிக்கா" படிச்சுட்டு வந்த சிரிப்பு தமிழக அரசியலைப் பார்த்து ஏற்படுகின்ற குமுறலைக் கொஞ்சம் குறைக்கிறது.
பதிலளிநீக்கு//// ஏவிஎஸ் சொன்னது…
பதிலளிநீக்குநச்சுன்னு கருத்து சொல்லீட்டீங்க. "குலைகுலையா முந்திரிக்கா" படிச்சுட்டு வந்த சிரிப்பு தமிழக அரசியலைப் பார்த்து ஏற்படுகின்ற குமுறலைக் கொஞ்சம் குறைக்கிறது. /////
மிக்க சந்தோசம், சில வரிகள் சிரிக்க வைச்சதுன்னு நீங்க சொல்றப்போ கேக்க நல்லாயிருக்கு.
ஒரு சின்ன உள்குத்து வைத்து , குலை குலையா முந்திரிக்கா என்பதை மந்திரிக்கா என அரசியல் கட்சிக்கு மேட்ச்சா போட்டத ஆழமா பார்த்து ரசித்த தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.