'மச்சான் தயவு இருந்தா மலை ஏரி புளைக்கலாம்'
'முத்து குளிக்க வாரிகளா'
இரண்டில் ஒன்று தலைப்பாய் கொள்ளலாம் என்று எண்ணம்.
என்னடா படுக்காளி இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற... என்று கேட்பது கேட்கிறது.
பாண்டி நாட்டு முத்து ரொம்ப பிரபலம்.பல பல நுற்றாண்டுகளாய்.
அந்த முத்து நகர் சார்ந்த ஒரு தகவல் இது.
முத்து எடுப்பது என்பது, சிப்பியை பிளந்து முத்தை புடுங்குவது.
சிப்பியை எடுப்பது முத்து குளிப்பது.
மேற்படி விவரங்கள்.
என்று முத்து குளிப்பது அரசு உடமையாய் ஆக்கப் பட்டு, முத்து ரத்தானதோ, அதற்கு முந்திய கால கட்டத்தில் உருவான ஒரு சமூக பழக்கம் இது.
முத்து குளிக்க கடலின் உள் செல்லும் முன், அவன் இடுப்பில் கயிறு கட்டி அதன் மறு முனையை தோழனுக்கு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். கடலின் ஆழத்தில் முச்சடக்கி செல்லும் மீனவன், சில நேரம் மயங்கி விழும் அபாயம் உண்டு. இடுப்பில் கட்டிய கயிரு பதத்தில் அதன் அசைவு கொண்டு கடலுக்கு அடியில் உள்ள விவரம் தெரியும் புத்திசாலித்தனம் உண்டு சக தோழனுக்கு.
அதே நேரத்தில் உன்னிப்பாய் இருந்து கயிறு தூக்கி விட வேண்டிய கட்டாயம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் சுருக்கில் உள்ளது உள்ளே சென்ற தோழனின் உயிர். உயிர் விலை தெரிந்து செய்ய வெண்டிய வேலை இது. யாரிடம் கொடுபது இந்த வேலையை. சரி மரபு படி இந்த வேலையை யார் செய்தார்கள். காலம் காலமாய் அவர்கள் கொடுத்தது இவரிடம். மச்சான். உறவு முறையில் மைத்துனன். அதாவது பெண்டாட்டியின் உடன் பிறந்தவன். கடலும் கடல் சார்ந்த இடத்தில் இப்படி ஒரு பழக்கம் என்றால், மலையும் மலை சார்ந்த இடங்களில் தேன் எடுக்க செல்லும் போதும், இந்த கயிறு கட்டி கொடுத்தது தாலி கயிறு தொடர்பிலே தான்.
ஒரு நிமிடம் சிந்தித்தால் இந்த ஆழமான உறவு,
உயிரையே நம்பி ஒப்படைக்கும் உறவு இன்று உண்டா....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக