தேர்தல் நிலவரம் எப்படி இருக்கு. யார் செயிப்பாங்க யார் தோப்பாங்க என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கும்.
ஊர் ஊரா சுத்துனதாலே நான் கேள்விப்பட்டத சொல்லுறேன்.
அறிவியல் பூர்வமாக ஆதார பூர்வமாக எல்லாம் கிடையாது.
என்ன ஒண்ணே ஒண்னு. எந்த கட்சி சார்பும் இல்லாம கேட்டத சொல்லுறேன் அவ்வளவுதான்.
1. நடக்கிறது மத்திய அரசுக்கான தேர்தல் என்றாலும் மாநில அரசியலும் அரசியல் வாதிகளுமே பிரதானமாக பார்க்க படுகிறார்கள்.
2. காங்கிரஸ் பத்தி பெரிய கெட்ட பேர் இல்ல. இருந்தாலும் கூட்டணில விட்ட கோட்டை பெரிய ஓட்டையா தான் இருக்கு.
3. பா ஜா கா பெரிய நம்பிக்கை தந்த மாதிரி தெரியல. இவங்க வந்தா இந்தியாவ தூக்கி நிறுத்துவாங்கன்னு யாரும் நம்பலே.
4. தலையே இல்லாத மூணாம் அணி ஒரு கேள்வி குறியும் கேலி குறியுமா இருக்கு.
இல்லேன்னா ஒரு மாநில கட்சியின் தலைவர் வெறும் 30/40 சீட் ஆட்டைய போட்டுட்டு ஒரு நாட்டை ஆள துடிப்பது தில்லா லங்கடி இல்லையா
5. கம்யூனிஸ்ட் எதிர்பார்க்கும் சேர நாட்டு வெற்றி ஊத்திக்கும் என்று தோன்றுகிறது.
மேற்கு வங்கத்தை மட்டும் நம்பி கொண்டு எத்தனை தூரம் பட்டம் விட முடியும்.
மூன்றாம் அணி கரை சேர நூரை தள்ளி விடும். கரை சேர முடியாது என்று சொல்ல முடியாது.
6. தமிழ் நாட்டில் ஜெயா ஜெயிப்பார் போலே தோன்றுகிறது. (ரொம்ப அம்மா கட்சி ஆட்கள் கிட்ட பேசிட்டேனோ ... ) ஆனால் இந்த மண் குதிரையை நம்பி எந்த ராஜா பட்டணம் போவார்.
எது எப்படியோ...
காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையை தவற விடும்.
பா ஜா கா வாய்ப்பு கம்மி.
மூன்றாம் அணி முக்கும்.
மாநில கட்சிகள் சில சீட் ஆட்டையை போட்டதால் பலமாகி விடும். அதிர்ச்சி வெற்றியும் தோல்வியும் எதிர்பார்க்கலாம். வானம் மப்பும் மந்தாரமுமாய் இருக்கும். இடியுடன் கூடிய மழை வரலாம்.
குதிரை பேரம் சுறுசுறுப்பாய் தேர்தல் முடிவுக்கு பின் நடக்கும்.
ஊடகத்திற்கு நல்ல வேட்டை.
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு எல்லாம் சூலம்.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை
அதிர்ஷ்டமான பானம் டாஸ்மாக்
அதிர்ஷ்டமான கானம் ஏப்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக