குழந்தைசாமி உழைத்து களைத்து அலுத்து வீட்டிற்கு வந்தார். அவர் மக்கள் இருவர். ஒருவர் யானை முகமூடி, மற்றவர் சிங்க முகமூடி அணிந்து கொண்டார்கள். ஒரு நாடகம் நடித்து காட்டினார்கள். சரிந்து படுத்து கொண்டு, பெரிதாய் அலட்டி கொள்ளாமல் பார்த்தார்.
இதே குழந்தைசாமியின் வரவேற்பு அறையில் நிஜமாகவே ஒரு யானையும் சிங்கத்தையும் விட்டு நாடகம் நடத்தினால்.
அதே கதி தான் நமக்கும். இது வரை டம்மி கதை களம், டம்மி கதாநாயகர்கள் நகைச்சுவைக்குரிய கேலி கூத்தாய் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து தூங்கி விட்ட ஒரு நிலையில் அடித்து எழுப்பி காட்டினால்.
பிட்சை பாத்திரம் பாட்டை தொலைக்காட்சிகளில் பாத்தேன். இந்த படத்துக்கு போக மாட்டேன் என்பவர்க்கு 'ஐயா வலியை மட்டும் உணர்ந்து கொண்டு புண்ணை பார்க்காமல் முகத்தை திருப்பி கொள்ள வேண்டாம்'
AK47 வைத்து கொசுக்களை விரட்டினால் எப்படி?
மாபெரும் சக்தியான சினிமா வெறுமே ஒரு பொழுதுபோக்கவா?
சமூக மாற்றம், சிந்தனை சீர்படுத்தல் என்ற பாதையில் பயணித்தால் எத்தனை பெரிய மாற்றம்.
கோபம் கொப்பளிக்கும் பாலா அக்கறையாய் சொல்ல நினைக்கும் சிந்தனை இது என்று தோன்றுகிறது.
சரி கதை என்ன.
உடல் நசிந்து பிறக்கும் மனித ஜீவன் வாழ விரும்பவில்லை எனும் போது, என்ன செய்ய. அதை இப்படி ஆக்கிய காரணகர்த்தாக்கள் யார்.
சரி முடிவு என்ன.
தன்னை கடவுளாய் அறிவித்து கொண்ட அகோரி மரணத்தை பரிசளிப்பது
பாலா பார்க்க மறந்த கோணம்
பிட்சை வாழ்வின் பிரச்சினை அம்சவல்லியோ, முருகனோ, தாண்டவனோ அல்ல. பரோபகாரி என்று சொல்லிக்கொண்டு முதுகெலும்பு இல்லாமல் பிட்சை போடுகிறானே அந்த புண்ணாக்கு தான். கை நிறைய சில்லறை மாற்றி கொண்டு நீட்டிய பத்திரத்தில் இடும் அவன், அந்த பிட்சைகாரரை உற்று பார்த்தானா. இல்லையே. தன் சுய திருப்தியோ அல்லது ஊருக்கு சொல்லும் எச்சில் குணமோ தானே உள்ளது. தர்மம் தலை காக்கும் என்ற உப்புமா தத்துவங்களை தகிடுதங்களை எல்லாம் குப்பையில் போடுங்கள்
உண்மையான அக்கறை இல்லாமல் பிரச்சினை தீர்க்காமல் விலகி செல்லும் அவன் தான் தண்டணைக்கு உரியவன்.
இது நடக்குமா
இதற்கு பின் பிட்சை போடும் முன் யோசிப்போமா.
முருகன் தாண்டவன் எல்லாம் இந்த வேலை விட்டு விட்டு பொது கழிப்பரையில் மலம் தின்பார்களா.
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவலர், தன் கடமையை செய்வாரா
நீதி துரையின் இறையாண்மையை இயலாமை விட்டு விலகுமா
இது நடந்தால் ருத்ரன் தேவை இல்லை.
இந்த சிந்தனை எதுவும் நடக்காமல் இதை வெறும் கதையாக பார்த்து விட்டு சென்றால் பாலாவின் முயற்சிகள் வீணாகும்
படுக்காளியின் இந்த "நான் கடவுள்" விமர்சனத்தை படித்தபோது அந்த படத்தையே திரை அரங்கில் பார்த்த உணர்வு வந்தது எனக்கு.
பதிலளிநீக்குஆனாலும், அவரின் கோபம் அவ்வளவு நியாயமாக பட வில்லையே?? எந்த கூற்றுக்கு?? தானம் செய்யும் முறையை அவர் குறை சொன்னவிதம், தானம் செய்பவருக்கு மிகவும் பயத்தை வரவழைப்பதாக இருந்தது.
படுக்காளி அவர்களே, நீங்களே பாருங்கள், தானங்கள் பலவகைப்படும்
வித்யா தானம்
கண் தானம்
இரத்த தானம்
பொருள் தானம்
இவை அனைத்தும் உயர்வானவையே..... ஒவ்வொரு தருணங்களில்.....
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் - வித்யா தானம் - இது ஒரு வகை
உயிருக்கு போராடும் ஒரு நோயாளிக்கு - ரத்த தானம் செய்தல், இது ஒரு வகை. அவர் பிழைத்து நம்மை வாழ்த்துவார் என்றெண்ணாமல், நாம் எவ்வளவோ முறை ரத்த தானம் செய்ய வில்லை??
திருமணத்திற்கு பொருளுதவி தேவைப்படும் ஒருவருக்கு - நாம் செய்யும் பொருள் தானம் அந்த பெண்ணின் வாழ்வில் ஒளி ஏற்றுமே!!
இறந்தவரின் விழியை எடுத்து அதன் மூலம், விழி இழந்த மற்றொரு மனிதரை இவ்வுலகை காண செய்வது.
ஆக, கொடுக்கும் குணம் உள்ள ஒரு சிலரும் படுக்காளியின் கோபம் கண்டு கொடுக்காமல் இருந்து விடக்கூடாது என்று நான் நீண்ட நெடிய உருவில் இருக்கும் எங்களூர் அய்யனாரை வேண்டுகிறேன்.
மிக அருமையான கருத்துக்கள் !
பதிலளிநீக்குஉங்களின் ஒவ்வொரு வரிகளும் என்னை மிகவும் சிந்திக்க வைத்து விட்டன .இனிமேல் இறக்கபடுவதை விட பித்சைகரர்கள் உண்மையிலேயே ஊனமுற்றவர்களா இல்லை பாசாங்கு செய்கிறார்களா என்று பாக்கணும் தல.
அன்புடன்
அபு
கோபி அபு இருவருக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்கு