பக்கங்கள்

ஆத்மாவின் பயணம் – விமர்சனம்

தலைவா உன் வருகை!
தூக்கினேன் என் இருகை!

வணங்கவும்!! கேள்விகளுக்கு விடை தெரியாததாலும்!! (சாய்சில் விட்டு விட்டேன்)

நன்றி - ஜோ பாஸ்கர்

விமர்சனம் - கதையின் கருவை ஒட்டி, இன்னும் ஆழ சென்று கேள்விகள் மலர்ந்து இருக்கிறது. தங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்
பசி இல்லாத பகை இல்லாத காயம் இல்லாத காமம் இல்லாத உடைகள் இல்லாத உடைசல் இல்லாத உலகைப்படைத்த உட்டாலக்கடி பிரம்மனே !உங்களிடம் சில வாதக்கேள்விகள்....

*நடு மரத்தின் கனியை உண்ணக்கூடாது எனப்பணித்த இறைவன் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று சொன்னது ஏன் ?

*நடு மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்ற உத்தரவு மனிதப் படைப்புகளுக்கு மட்டும் தானா ? அப்படியானால் விலங்குகளும் இன விருத்தி செய்கிறதே எப்படி ?

*நிர்வாணம் என்றல் என்னவென்று இறைவன் படைத்த விலங்குகள் இன்னும் உணரவே இல்லையே! அப்படியானால் அவை இன்னும் நடு மரத்தின் கனியை உண்ணவே இல்லையா ?

*மனிதப்படைப்புகள் நிச்சயம் தனது உத்தரவை மீறும் என்று இறைவனுக்கு முதலிலேயே தெரியுமா? ஆண் என்றும் பெண் என்றும் இரு வேறு விதமாகப் படைத்தது ஏன் ?

*மற்ற எந்த விலங்குக்கும் பேசக் கற்றுத்தராத இறைவன் பாம்புக்கு மட்டும் பேசக் கற்றுத் தந்ததேன் ?

*சில தினங்களுக்கு முன் நீங்கள் வினவிய காலா நூலா கேள்வி மீண்டும். ஆதாம் ஏவாள் தவறு செய்த பொது தம் கால் கொண்டு ஆடினார்களா அல்லது நூல் கொண்டு ஆட்டுவிக்கப்பட்டர்களா ?

*பாம்பு சொல்கிறது - "நடு மரத்தின் கனியை உண்டால் நீங்களும் இறைவனைப் போல ஆகி விடு வீர்கள்" -அப்படி என்றால் நடு மரத்தின் கனி என்றால் பகுத்தறிவு என்று பொருள் கொள்ளலாமா?பகுத்தறிவு வந்ததால் தான் நிர்வாணம் புரிந்ததா?பாம்புக்கு பகுத்தறிவு எங்கிருந்து வந்தது?படைத்தவன் பாதகம் மிக்க பாம்பைப் படைத்ததேன்?

*ஆதாமும் ஏவாளும் பாவம் புரிந்த பிறகு தோட்டத்தில் இருந்து துரத்தி விடப்பட்டார்கள். விலங்குகள் வெளியே வந்தது எப்போது?

*உங்கள் கதையின் நாயகிக்கு தொப்பிள் இருந்ததா ? அவள் படைக்கப்பட்டவளா அல்லது பிறந்தவளா என்பதை உறுதி செய்ய ..

*பசி என்பதையே படைக்காத இறைவன் வாயையும் வயிற்றையும் படைத்தது ஏன்?

1 கருத்து:

  1. படுக்காளி ரொம்ப சிம்பிள் உங்க அத்தனை கேள்விக்கும் ஒரே பதில்தான்.
    ஆதாமும் ஏவாளும் தோட்டத்தில் இருந்தார்கள். தினமும் அவர்கள் இறைவனை கண்டு வணங்கி வந்தார்கள். ஆனால் இறைவனுக்கும் இது தொடர் நிகழ்வாக போனதால் அவருக்கும் 'போர் ' அடித்துவிட்டது. அதே சமயம் ஆதாமும் ஏவாளும் சில தினங்களாக அவர் பக்கம் வரவே இல்லை. கடவுளும் கூர்ந்து கவனித்தார். இருவரும் உல்லாசமாக , சந்தோஷமாக அவரவர் விருப்பப் படி திரிந்து கொண்டிருந்தார்கள். இதை இப்படியே விட்டால் நம்மளை கண்டுக்க மாட்டார்கள் என்றெண்ணி நடு மரத்தின் கனி படைத்து, அதை சாப்பிடாதீர்கள் என்று சொல்லி வைத்தார். அவர்களும் சாப்பிடவில்லை. என்னடா சொன்னதை கேட்கிறார்களே என்று நினைத்து பாம்பை படைத்து ச்சும்மா கொஞ்ச நேரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து யாரிடம் என்ன பேச வேண்டும் என்பதையும் சொல்லி வைத்தார். சுமூகமா போய்கிட்டிருந்த ஆதாம், ஏவாள் கதையில் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது இப்படித்தான்.
    ஆமா இந்த கதையின் மூலம் நீங்கள் அறியும் நீதி என்ன? அடுத்த கருத்துரையில் சொல்கிறேன்.
    - கொடும்பாவி

    பதிலளிநீக்கு