பக்கங்கள்

அறிவுரை யார் சொன்னாலும் யூஸ் இல்லை

பரபரப்பாய் பள்ளி செல்லும் ஆத்மாவை தடுத்து நிறுத்தி சொன்னான் "என் பெயர் ஆத்மா"
"ஒ... அப்படியா என் பெயரும்..."
இடை மறித்து சொன்னான் "தெரியும் உன் பெயர் ஆத்மா, என்னை நன்றாக உத்து பார்”

ஆத்மா அசந்து போனான். என்ன நீ என்னை போலே அல்லவா இருகிறாய்.
"ஆம் நான்தான் நீ. நீ தான் நான்"
"புரியல"
"இதோ பார், எனக்கு நேரம் குறைவு. ஒரு டகால்டி செய்து முப்பது வருடம் முன்னோக்கி வந்து நம் வாழ்கையை மாற்றி அமைக்க வந்திருக்கிறேன்”
"விளையாடு வேண்டாம்னு சொல்லலே, நல்லா படி, அது ஒண்ணுதான் உன்னை காப்பாத்தும், உனக்கு பெஸ்ட் நிர்வாகம், தயவு செய்து வணிகவியல் வேண்டாம்”
கவனமா கேளு… இந்த புகை பிடிக்கிற பழக்கத்த ஆரம்பிக்காதே, பின்னாலே விடுறது ரொம்ப கஷ்டம். அப்புறம் டெய்லி வாக்கிங் போ. பிற் காலத்திலே உடம்பெல்லாம் தளந்திருது.

கஷ்டமா இருந்தாலும், பிடிக்கலைனாலும் பெரியவங்க சொல்றத கேளு, நம்ம நல்லதுக்கு தான் சொல்றங்க. அப்புறம் அந்த பக்கத்து வீட்டு மாலதி மேட்டர விட்டிரு, அதுலே ஒரு யூசும் இல்லே.

சினிமா பாரு, வேண்டாம்னு சொல்லலே, ஆனா அதுக்கு நீ செலவழிக்கிற நேரம் ரொம்ப ஜாஸ்தி. அப்புறம் முக்கியமானது ஓவ்வொரு மாசமும் ஒரு சின்ன அமௌன்ட் சேமிக்க பாரு. இன்னொரு முக்கியமான விஷயம்.....

காற்று சுழண்டு அடித்தது . திடிரென வண்ண வண்ண நட்சத்திரங்களாய் தெரிந்தது. ஒரு கருகிய வாடை. லேசாய் வயிட்றை பிசைந்து கொண்டு ஒரு இம்சை. திடிரென மறைந்தது அந்த பிம்பம். ஆத்மா திகைத்து நின்றன்.

யாரது... என்னை போலே ஒருவன், திடிர் என்று வந்தான், சொன்னான், மறைந்தான். புதுசா ஒன்னும் சொல்லலே, அப்பா சொன்னது, அம்மா சொன்னது, அண்ணன் சொன்னது எல்லாம் கலவையாய் சொன்னான். "அட போங்கப்பா .....”

மனதினுள் இப்படி சொல்லிவிட்டு மெல்லமாய் நடக்க ஆரம்பித்தான் ஆத்மா

1 கருத்து:

  1. எனது கிவ்வாய் கிரக அனுபவம்:
    -----------------------------

    நான் கூட இது போன்றதொரு ஆத்மாவை ஒருமுறை கண்டேன். அது நல்லதா, கெட்டதா என்று கதை முடிவில் விளக்கமுண்டு.

    அது என்னிடம் கடவுளை பார்க்க ஆசையா என்று கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஆம் என்றேன்.

    மேலே பார் என்றது, பார்த்தேன்.வானம் என்றேன்

    கீழே பார் என்றது பார்த்தேன். பூமி / நிலம் என்றேன்.

    உன்னை பார்க்கிறாயா என்றது. அதற்கும் ஆம் என்றேன். தன் பாக்கெட்டில் கை விட்டு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை நீட்டியது. (யாரிடம் இருந்து அடித்ததோ??).

    என் மெல்லிய நகைப்பை கண்டு சிறிது கோபம் கொண்டது போல் முகத்தை வைத்துக்கொண்டது.ஏற்கனவே அழகான அந்த முகம், மேலும் அழகாரமாகியது (அழகிய விகாரம் -இதன் கலவை)

    பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கிடைக்குமா??

    நான் கேட்டேன் டீ, பிஸ்கட் சாப்பிடலாமா என்று!!

    சொல்லி முடிக்கக்கூட இல்லை. அது பளீரென்று என்னை ஒரு அறை விட்டதில், அதன் கூர் நகம் முகத்தில் கிழித்து, ரத்தம் வழிந்தது. உடனே, தன் நீண்ட நாக்கை வைத்து, என் கன்னத்தில் வழியும் ரத்தத்தை நக்கியது. கர்ண கொடூர குரலில் சொல்லியது, எங்கள் கிவ்வாய் கிரகத்தில் நாங்கள் விரும்பி சாப்பிடுவது, மனிதர்களின் ரத்தத்தைத்தான்.

    வீல் என்று அலறி கண்விழித்தேன். மணி காலை ஆறு.

    பதிலளிநீக்கு