இரணடு மனித ஜீவன்கள் உறவாய் இருக்க… என்ன வேண்டும் ?
ஏன் இந்த கேள்வி, இதாலே என்ன யூஸ் என்பவருக்கு.
கூடி வாழும் இயல்பினன் மனிதன். தனியனாய் வாழ இங்கு முடியாது. மிகவும் அவசியம் சக மனித உறவு.
நட்பு, காதல், மரியாதை, என பல பரிமாணங்களில்.
சரி. அடுத்து என்ன.
உங்களுக்கு பிடித்தமான அதே சமயம் கடினமான ஒரு உறவு சமைத்தலை மனதில் கொள்ளுவோம்.
என் மானசிக குரு பாலகுமாரனின் நட்பு எனக்கு வேண்டும. வயிற்று பிழைப்புக்காக என் மேலதிகாரியின்/வாடிக்கையாளரின் உறவு வேண்டும்.
படுக்காளி இப்படி நினைக்க… நீங்கள் இப்படி நினைத்தாலும் ஓகே.
என் மனம் கவர்ந்த நங்கை, காதல் என்னும் உறவில் வேண்டும்.
எது எப்படியோ கேள்விக்கே மறுபடி வருகிறோம்
இரணடு மனித ஜீவன்கள் உறவாய் இருக்க… என்ன வேண்டும் ?
நண்பன் ஒருவன் சொன்னான்
'ஒருமித்த ரசனை அல்லது கருத்து'
இருக்கலாம். ஆனால் என் நெருங்கிய நண்பனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். நான் சைவம் அவன் அசைவம், நான் காங் அவன் BJP , நான் ரஜினி அவன் கமல். நான் இலக்கியம் அவன் ‘வேலை இல்லே போடா’ இருந்தும் நாங்கள் மிக நல்ல நண்பர்கள்.
இது எப்படி. கருத்தொருமித்து கதைக்க ஒன்றுமே இல்லை. வேறுபாடுகளை உணர்ந்து ஒத்து கொண்டு நண்பர்களாய் நீண்ட காலமாய் நாங்கள்.
சரி அடுத்து என்ன செய்யலாம்.
நாம் ஒரு சூத்திரம் உண்டாக்குவோம், இதை கடைபிடித்தால் யாருடனும் உறவு சமைக்கலாம் என்று அறிவிப்போம். பின்னர் உலகுக்கு சொல்லுவோம், உறவுக்கு அழைப்போம்.
உங்கள் கருத்துக்களை அறியும் ஆவல் உண்டு.
படுகாளியின் சிற்றறிவிற்கு எட்டிய சூத்திரம்.
உறவுக்கு தாரக மந்திரம் இரண்டு.
பரஸ்பர பாராட்டு
நம்பிக்கை
குணங்களோ செயலோ எண்ணமோ என்னமோ ஒன்றை பரஸ்பர அங்கிகரிக்க வேண்டும். பாலகுமாரனை நான் பாராட்டி அங்கிகரிக்கிறேன், ஆனால் அவர் என்னிடம் உயர்வாய் கருதுவது ஒன்றும் இல்லை. அங்கனம் அவர் பாராட்டும் ஒரு நிலை வந்தால் அவரும் என் உறவை நாடுவார்.
இதுவே முதல் படி.
இது செய்து விட்டால் ஒரு 70% வேலை முடிந்தது.
அடுத்து நம்பிக்கை வேண்டும். பரஸ்பர பாராட்டு மட்டும் இருந்தால் நாம் விலகியே இருப்போம். நம்பிக்கையும் சேரும் போது அங்கே உறவு மலரும்.

பதிலளிநீக்குஇதுவே முதல் படி.
இது செய்து விட்டால் ஒரு 70% வேலை முடிந்தது.
அடுத்து நம்பிக்கை வேண்டும். பரஸ்பர பாராட்டு மட்டும் இருந்தால் நாம் விலகியே இருப்போம். நம்பிக்கையும் சேரும் போது அங்கே உறவு மலரும்.
----------------------------------------------
ஒன்றே சொன்னீர்கள்
இதை நன்றே சொன்னீர்கள்
அதையும் இன்றே சொன்னிர்கள்
பரஸ்பர பாராட்டு நட்பை வளர்க்கும்
தேவை அறிந்து உதவி செய்தல்
மனித நேயம் வளர்க்கும்
உதவி பெற்றவர் அடுத்த உதவி
வேண்டுவோரின் நலம் எண்ணி, அவருக்கு உதவ
இவரிடம் உதவி பெற்றவர், அடுத்த உதவி வேண்டுவோரை தேட
இது ஒரு செயின் ரியாக்ஷன் ஆகும்.
வாய் திறந்து பாராட்ட பொருள் தேவை இல்லை
ஆகவே அதையாவது தைரியமாக செய்வோம்
அடுத்தவரை பாராட்ட பஞ்சம் வேண்டாம்
நிறைந்த நெஞ்சம் வேண்டும்
நிறைந்த நெஞ்சம் பாராட்டை ஆறாய் அள்ளிக்கொடுக்கும்
அந்த அன்பில் நனைந்தவர் வாழ்த்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்
உறவுகளின் தவறுகளை மறந்து விடுவோம்
அல்லது அவர்கள் உணர மன்னித்து விடுவோம்
குறைகளை மன்னிப்பதும்
நிறைகளை பாராட்டுவதும்
உறவுகளை மேம்படுத்தும்