நன்றி : புகைப்பட உதவி : ராஜ் - என் மகன்.
புதிய வலைப்பதிவு
நன்றி : புகைப்பட உதவி : ராஜ் - என் மகன்.
சராசரி மனிதனை சும்மா விடுங்க
பாமர மனது சர்ச்சைக்கு ஏங்குகிறது,இருபத்தி றோம் நூட்றான்டில் மிக நீளமான தொல்லை / தொலைந்த நேரம். ஆறு நிமிடங்கள் காணமல் போய் பின்னர் நாம் கண்டு பிடித்த சூரியன். உதய சூரியன். (அரசியல் அல்ல)
காலையிலே எழுந்து குளித்து வெறும் வயிறில் நீங்கள் பிரார்த்தனையில் மூழ்கி இருந்தாலோ, அல்லது தொலைகாட்சி பேட்டியின் முன் உக்காந்து மேதைகள் விளக்க உரையோடு, நகம் கடித்து கைகளை பிசைந்து கொண்டு பார்த்த கூடத்தில் இருந்தாலோ, மன்னிக்கவும் நான் உங்கள் கட்சி இல்லை. நான் சோத்து கட்சி.
ஊடகங்கள் கட்சை கட்டி கொண்டு சூரிய கிரகணத்துக்கு நேரடி ஒழி / ஒளி பரப்பு. கழுத்திலே கட்சை கட்டு, முதுகுக்கு பின்னால் கல்லா
கட்டு.இது ஒரு பூகோள நிகழ்வு. பிரத்தேயகமான ஒரு நாள். அவ்வளவுதானே, இதை ஏன் இவளவு பெரிசாக ஆக வேண்டும்.
பழைய காலத்தில் தீடிர் என்று இருள் சூழ மக்கள் பயந்து இருக்க வேண்டும். மேல் நோக்கி பார்த்த சிலருக்கு கண் நொள்ளை ஆகி இருக்க வேண்டும். எனவே இது போன்ற நாட்களில் அச்சம் கொண்டு அதை செய்யாதே, இதை செய்யாதே என்று சொல்லி இருக்க கூடும். அதை இன்று வரை கேள்வி கேட்காது செய்தால் எப்படி…. ஆன்மீக வாதிகளே அடங்குங்கள்!!!
சரி. அவன் உண்ண கூடாது என்ற உடன் நீங்கள் உண்டு விட்டால் ஆகி விட்டதா. ஆன்மீகத்தை குறை சொன்ன உடன் உங்கள் வேலை முடிந்ததா. பகுத்தறிவு பாசரைகளே பதுங்குங்கள்
சராசரி மனிதனை சும்மா விடுங்க
அஞ்சலி
நாற்பது வயதில் இந்த தொல்லை.
பிறந்த முதல் பத்து பதினைந்து வருடம் வரை விவரம் தெரியவில்லை. அடிப்படை விவரங்கள் சேகரித்தே அந்த பருவம் முடிந்து போயிற்று. பின்னர் சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்து உலகை புரிந்து கொள்ள முயற்சிக்கும் பருவதில், சக மனிதரின் வாழ்வு நமக்கு நினைவில் பதியத் தொடங்கும். சமூக அங்கி காரம் என்னும் மாயத் தூலபாரத்தின் துணை கொண்டு அவர்களை உற்று நோக்கி அவர்கள் வெற்றியை மனதில் குறித்து கொண்டு அவர்களை ஆதர்சன குறிக்கொளாகவும் கொள்வோம்.
அப்படி ஒரு பிரிவு இப்போது எனக்கு நிகழ்தது.
மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய என் உறவினர் இறந்து போனார் என்று கேட்டவுடன் மற்ற எந்த வேலையும் பெரிதாக தெரியவில்லை. முக்கியம் என்று நான் நினைத்த விடயங்கள் அர்த்தம் இல்லாததாக தோன்றியது. இனி அவரை பார்க்க மாட்டோமே பேச முடியாதே என்ற நினைவு நெஞ்சை அடைத்தது.
அவரை பற்றி :
பரவலான ஆழமான தகவல் பெட்டகம். படிப்பு, குடும்பம், பணம் என்ற எந்த பின் புலமும் இல்லாது தன் முயற்சியில் வணிகத்தில் முன்னேறி குடும்பம் சமைத்து இருபதிற்கும் மேற்பட்ட குடும்பத்தின் ஜீவனம் ஓட்ட வேலை கொடுத்தவர். எந்த விடயத்தை பேசினாலும் ஆர்வமாய் பங்கு பெற்று பேசுவார்.
இசை, இந்திய சட்டம், இறை, இனம், மருத்துவம், என எதுவும் பேசலாம்.
அவரது பொது அறிவை சொல்ல ஒரு விடயம்
அமரர் சுஜாதா பத்து கேள்விகள் கொடுத்து இதில் நான்குக்கு மேல் சரியாய் சொன்னால் நீங்கள் கில்லாடி என்பார். நம்மவர் அதில் ஏழு சரியாய் சொன்னார்.
தற்செயலாய் சந்தித்த ஒரு பெரியவர் சொன்னார். ஒ அவரா நன்றாக தெரியும். ஒரு முறை என் தம்பியை நாலு பேர் அடித்து விட்டனர், அது மட்டும் இல்லாது தினம் தொல்லை… என்ன செய்வது என்று தெரியாத போது இவர் வந்து அந்த நான்கு முரடர்களையும் அடித்து வழிக்கு கொண்டு வந்தார் என்றார்.
நம்ப முடியாத தகவல் அது. நான் சென்று கேட்ட போது உம்… என்று சாதாரணமாய் சொன்னார். எப்படி என்ற போது சிறிது வர்ம கலை தெரியும் அதை வைத்து சமாளித்தேன் என்றார். வர்ம கலை தெரிந்ததை கர்வம் இல்லாது சொன்னார்.
சற்று விலகி நின்று அவரை மேலும் கீழும் பார்த்தேன். பின்னர் கேட்டேன், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவும் வண்ணம் எதாவது சொல்லுங்களேன் என்றேன். சிறிது நேர சிந்தனையில் சொன்னார். சொன்னதை இங்கே சொன்னால் வன்முறைக்கு நான் உரை எழுதியது ஆகாதா. வேண்டாம் என்னோடே இருக்கட்டும்.
தன் தொழிற் சாலையில் நடந்த ஒரு நிகழ்வில் உள்ளூர் மீனவர்கள் சுமார் ஐம்பது பேர் சேர்ந்து அடிக்க வந்த போது ஒற்றை மனிதராய் சமாளித்து அவர்களை ஓட ஓட விரட்டினார் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன்.
சரி பயம் இல்லாத மனிதர் என்று சொல்ல முடியாது. அறுவை சிகிச்சை என்றால் அப்படி ஒரு பயம், ஏன் மருத்துவமனை என்றாலே பயம் தான்.
நிறை குறை உள்ள நல்ல மனிதர்.
அவர் இறந்து விட்டது இயல்பு. எனது கேள்வி.
இத்தனை அனுபவம் செறிந்த அவரது வாழ்கை தகவல்கள் அவரோடு சென்று விட்டனவே. அந்த தகவல்கள் மாத்திரம் வேறு யாருக்காவது கிடைத்து இருந்தால் தன் வாழ்கையும் உயர்த்தி பல குடும்பங்களை வாழ வைத்து இருக்கலாமே!!!! என்று சிந்தித்த போது அவரோடு ஒரு தருணத்தில் பேசிய வார்த்தை எதிர் ஒலித்தது
அவரின் ஒரு லட்சியம். புத்தகம் எழுதுவது. எதை பற்றி என்று கேட்டேன். உலகம் பற்றி என்றார்.. புத்தகம் எழுத தொடக்கி 50 பக்கம் வரை எழுதி இருக்கிறேன் என்றார். மலையாளத்தில். மொழி அறிவு இல்லாத காரணத்தால் வாசிக்கும் வாய்ப்பு இல்லை.
புத்தகம் அது அவர் இறுதி வரை நடக்க வில்லை
முயற்சிக்கிறேன் என்னால் அவர் கனவு நிறை வேற்ற முடியுமா என்று.
ஏன்ஜெல்ஸ் அண்ட் டேமன்ஸ் - விமர்சனம்.

எனும் போது படம் சரி இல்லையா, என்றால் நிச்சயம் இல்லை. நல்ல தொழில் நுட்பத்துடன் ரசனையாய் எடுக்கப்பட்டே இருக்கிறது. சரி ஏன் இப்படி சொல்லுர, என்பவருக்கு, படத்தின் கதையில் தொடங்குவோம். மறைந்த சாண்டோ சின்னப்பா தேவர், போலே கேட்டால்,
'ஒற்றை வரியில் கதை சொல்லு'
'அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அடிதடி'
மூன்று வார்த்தையில் முடி ந்து போச்சே. இன்னும் விரிவாய் சொல்லு.
பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய கலிலியோ கத்தோலிக்க குருமார்கள் சண்டை நீண்டு இருபத்தோராம் நூற்றாண்டிலேயும் தொடருகிறது.
இந்த சாராம்சம் படத்தில் இல்லையே.
தெரிந்ததில் தொடங்கி தெரியவில்ல்லையே அல்லது தெரியாது என்று முடிப்பது ஆன்மீகம். தெரியாததில் தொடங்கி தெரிந்து விட்டது என்று முடிப்பது அறிவியல்.
நம் நாட்டில் இந்த சண்டை குறைவு. கருப்பு சட்டை பொட்டு பகுத்தறிவு பேசும் கூட்டம் கூட ஒரு மதத்தை சாடுவதையே முக்கியமாக கொள்ளுவார். அமரர் சுஜாதா தொடங்கி அப்துல் கலாம் வரை சராசரி மனிதன் வரை அறிவியலையும் ஆன்மீகத்தையும் சரி சமமாய் கொள்ளுவான்.
உடைந்த கப்பல் பற்றிய படம் தானே என்று மெத்தனமாக இல்லாமல் வருஷங்களாய் ஆராய்ச்சி செய்து தம் பிடித்து கடலுக்கடியில் போய் விவரம் சேகரித்து திரையில் தரும் போது, அதன் தரமே தனி.
அப்படி ஒரு மெனக்கெடல் இதில் தெரியவில்லை. நாவலை மட்டுமே நம்பியது பொல் தோன்றுகிறது.
நாவல் திரை வடிவம் பெரும்போது எக்கச்சக்க சிக்கல். ஒன்றே ஒன்று மட்டும் உதாரணத்துக்கு.
விக்ரம் பூரா ப்ரொப்ளெம்.
அமரர் சுஜதா கதையாய் எழுதியபோது,
"இந்த எல்லையை மீறி செல்பவர் கைது செய்யப் படுவார்கள் " என்ற எச்சரிக்கையும் தனிப்பட்டு எழுதி இருந்தது. இதை படிக்க தெரியாத, இதை பற்றிய எந்தவித பயமும் இல்லாமல் ஒரு கருங்குருவி அதன் மேல் உட்கர்ந்து கொண்டு இருக்க, ................."
என்று செல்லும் அந்த வரி. இதை எடுக்கிறேன் பேர்வழி என்று சென்ற கலை ஞானி கும்பல் தேடி தேடி பார்த்தும் கிடைக்கவில்லை என்று புறாவை பிடித்து பெயிண்ட் அடித்து இரண்டு நாள் தாமதத்தில் (இந்த புறா காட்சிகக மட்டும்) படமாக்கினார்களாம்.
சரி விளைவு என்ன. கதை வாசிக்காத ஒருவரும் இந்த உணர்வை பெற வாய்ப்பு இல்லை.
ஒன்று புரிகிறது. இலக்கியம் வேறு திரைப்படம் வேறு.
திரை க்கதையில் நிறைய மாறுதல் செய்துள்ளார்கள். மிக நல்லது. மிக பெரிய ஆன்டி மட்டர் கண்டுபிடிப்பை செய்தது ஒற்றை தாத்தாவும் ஊர் சுற்றும் மகளும் என்கிறது நாவல். திரையில் அப்படி இல்லை. ஒரு குழுவே உண்டு.
டேன் ப்ரௌனின் பிம்பமே கதா நாயகன் லங்க்டன். அதனால் தானோ என்னவோ செர்ன் இல் நடக்கும் கொலையை துப்பு துலக்க தூங்கி கொண்டு இருக்கும் பேராசிரியரை கொண்டு வருவார்கள். மகளுக்கு முன்னால் முந்திரி கொட்டையாய் இவர் வந்து இவர் மேல் கதை நகரும். திரையில் அதுவும் இல்லை.
பிரசினை செய்ய கூடிய சில விடயங்கள், அரேபிய கொலை காரன், போப் ஆண்டவருக்கு சோதனை கூழாய் மூலம் பிறந்த மகன் என்று உள்ளதை தவிர்த்து விட்டார்கள். புத்திசாலிகள்.
ஆன்மீகத்தை சார்ந்து அறிவியலை சாடுவதாய் மத குரு பேசும் ஒரு வாதம் எனக்கு நாவலில் ரொம்ப பிடித்த இடம்.
"ப்ரொட்டான், ந்யு ட்ரான் என்று விளக்கி காரணம் சொல்லி விட்டு நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன. சராசரி மனித வாழ்க்கையில் இறைவன் என்ற பிம்பத்தினால் அவனுக்கு பெரும் நம்பிக்கையும் நிறைவும் அமைதியும் தர ஏன் முயற்ச்சிகவில்லை. காரணமே இல்லாது நோக்கமே இல்லாது தானாய் உருவாக்கபட்ட சதை பிண்டம் தான் மனிதன் என்று நிருபிப்பதின் மூலம் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள். என்று உணர்ச்சி வயப்பட்டு கேட்பார்.
என் கோணத்தில் நான் யோசித்தது இது.
நடு ரோட்டில் ஒரு சராசரி கிற்ஸ்துவனை நிருத்தி புனித தெரசம்மாள் பற்றி சொல்லு என்றால். நே!! என்று விழிப்பான். இன்னும் கேட்டால் தலை சொரி ந்து கொண்டு பெரிய கோவில்களின் பக்க வாட்டில் ஒளிந்து கொண்டு இருக்கும் அந்த சிலையின் வடிவை சொல்லுவான். இதற்கும் மேலாய் ஒன்றும் தெரியும் வாய்ப்பு குறைவு.
ஒரு கன்னியாஸ்திரி புனிதர் ஆக காரணம், சர்ச்சை உள்ளாக்கி அது ஆன்மீகமா லொகிகமா என்று வெடித்து அதை அடிப்படையாய் கொண்டு உருவாகிய சிலை கோவிலுக்குள் வைக்க தகுதி அற்றது என்ற போப் ஆண்டவரின் ஆணையை தொடர்ந்து அது பேர் இல்லா கோவிலுக்கு மாற்றப் பட்டது என்று அறிவது சராசரி மனிதனுக்கு எந்த வகையில் உபயோகம்.
ஒரு சுற்றுலா பயணியின் ஆர்வத்தோடு பாப்பானவர் அறை, அவர் தேர்வு, ஆலயங்கள்,சாலைகள் என ரோமை சுற்றி சுற்றி கலக்கி இருக்கிறார்கள். புகை பிடிக்கும் கர்தினால் நிதர்சனம்.
மைக்கேல் ஆஞ்சேல்லோ டிசைன் செய்த காவலர் உடை சூப்பர். மாசு படக் கூடாது என்று குறைக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு அறையில் பதைபதைக்கும் அந்த புத்தகத் தேடல் ஒரு சபாஷ்.
மொத்ததில் ஒகே. இன்னும் நல்லா இருந்து இருக்கலாம்.
வலி தவம்

அது ஒரு உணர்ச்சி. மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அத்தியாயம்.
தொடங்கும் முன் :
சரி மேலே!!! .... என்று கவுண்டமணி பாணியில் செல்வோம்.
எங்கே தொடங்குவது :
ரம்ஜான் நோன்பு நேரம். துபாய் அலுவலங்கள் கதவு மூடி உணவு உட்கொள்ள தயார் ஆகும் மாலை நேரம். சூரியன் மறைந்தால் ஆரம்பிக்கலாம் என்று இஸ்லாம் சகோதரர்கள்.
உடல் சோர்வு. வியர்வை. முதலில் அசொவ்கரியமாய் ஆரம்பித்த உடல் சோர்வு மெல்ல பரவி உடல் முழுதும் வியாபித்தது. கால் மாற்றி கால் மாற்றி அவஸ்தையாய் நின்று இருந்தேன். வியர்வையின் அளவு அதிகரித்தது. முக்கியமாய் முகத்தில் கூடுதலாய் வியர்த்தது. காற்று குறைவு என்று மனதில் ஒரு நினைப்பு.
காதுகளில் கேட்கும் ஒலியின் தாக்கம் அன்னியமாய் பட்டது. தட்டுத் தடுமாறி என் மேசையை அடைந்து இருக்க, மேலும் சுழன்றது. முன் சரிந்து படுத்த நிலை மேலும் அசௌகரியம் தர நிலையை மாற்றி தலை பின்னுக்கு சாய்த்தேன். நினைவு தவற காது சில் வண்டின் சத்தம் அதிகரிக்க கண்கள் இருட்ட தரையில் மயங்கி விழுந்தேன்.
உடையத உட்டுட்டு உருளுரத பிடிச்சிபுட்டோம்
சாப்டுறது எதுக்கு ????மக்கா!!! சத்தா இருக்கதுக்கு.......
நம் அத்தனை பேரின் வயிற்றில் , உண்ணும் உணவை செறிக்க வைக்க ஒரு ரசாயன தொழிற் சாலை.
ஒரு மாமிசத்தை தகிக்கும் ரசாயணம் கீரைக்கு அவசியம் இல்லை.
கீரையை தகிக்கும் ரசாயணம் மாமிசத்திடம் தோற்று விடும்.
உண்ணும் உணவின் தன்மையை அனுசரித்து ஏற்ற இறங்கங்கள் அவசியம்.
சரி இதை அறிந்து கொள்வது எப்படி.
கண்கள் வழி சில தகவல்கள், மூக்கின் வழி மணமாய் சில தகவல்கள். இவற்றை ஆலோசித்து உடனடியாய் தடாலடியாய் ஒரு கலவை உண்டு செய்து எச்சில் வழி அனுப்பும் விந்தை.
அகஸ்மாத்தாக சுவையான மணம் அடித்தாலோ அல்லது உணவை பார்த்தாலோ நம்மை அறியாமல் வாயில் எச்சில் ஊறி பாவம் போலே சில நேரம் நிற்கும் கதை வேறு உண்டு.
ஒரு கேள்வி ?????
எத்தனை தரம் நம் உடல் தேவை அறிந்து அதற்காக மட்டும் நாம் உணவு உண்டு இருக்கிறோம். காய்ச்சல், வாய்வு புடிப்பு போன்ற தருணங்களை தவிர்த்து விட்டால்.
சுவை என்னும் சுகம், வயிறு நிரம்பிய உடன் கிடைக்கும் நிறைவு என்னும் பக்க விளைவுகளை மட்டுமே பக்கவாக எதிர் பார்த்து இருக்கிறோம்.
உண்பதில் மாத்திரமா ??
இன்னும் எத்தனை விடயங்களில்
உடுத்துவதில் ..............
உழைப்பதில் ..............
உடலுறவில் ..............
உறவாடுவதில் ..................
உரையாடுவதில் .................
இதை தான் படைத்தவன் படைத்தான் உலகுக்காக
மனிதன் பிரித்தான் அவனுக்காக
என்பதோ.
இது தான் நடு மரணத்தின் கனியோ.... , கீழ்படியாமையின் செயலோ.........
சம்மனசும் சாத்தானும் / ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ்.
சமிபத்தில் திரை அரங்குகளை வந்தடைந்த டேன் பிரவுன் நாவல் ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ்.
நாவல் படித்து விட்டேன். இன்னும் படம் பார்க்கவில்லை. இந்த வார இறுதியிலே செல்ல திட்டம் உண்டு. பார்த்து விட்டு ஒரு திரை விமர்சனம் எழுதும் ஆசையும் உண்டு. அதற்கு முன்னோடியாய் இதை எழுத நினைத்தேன்.
நிறைய பேருக்கு அவரை பிடிக்காது. அவர் பெயர் கசக்கும் ஒரு எட்டி காய். எனக்குஎன்னாவோ நிறை குறையோடு பார்த்து நம் தகவல்களை தேத்தி கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. எந்த குழுவையும் நாம் சார வேண்டாம். அவர் பக்கமும் போக வேண்டாம். தகவல்கள் கேட்டு விட்டு நம் அறிவை விருத்தி செய்து கொள்வோம் என்று முடிவெடுத்தால் அவர் ஒரு தகவல் பெட்டகம்.
அவர் நிறை
துப்பறிதல் விடுகதை ஆன்மிகம் தத்துவம் அறிவியல் சரித்திரம் என்னும் அவியல் தான் அவர் கதை. ஒரு பிரச்சினை, எது நிஜம் எது கற்பனை என்று தெரியாமல் நாம் விழிப்போம்.
ஒரு கொலையில் அவர் கதையை தொடங்குவார். பரபரப்பாய் கதையை முழு வேகத்தில் ஓட்டுவார். நாயகனையும் நாயகியையும் ஓட ஓட வைப்பார். மாய்ந்து மாய்ந்து விடுகதை விடுவிக்க சொல்லுவார். நமக்கு தெரியாத புது புது தகவல்கள் சொல்லி கதையின் போக்கில் நமக்கு சரித்திர பாடம் நடத்துவார். அறிவியல் பாடம் நடத்துவார். தத்துவ விசிறி வீசி, கதை முடிந்ததும் நம்மை நிறைய யோசிக்கவும் தகவல்களை யாசிக்கவும் வைப்பார்.
கதை என்ன :
www. என்னும் வலைஉலகம் உருவாக்கியது யார். 2008 ல் உலகம் உருவானது எப்படி என்று கண்டு பிடிக்க போகிறோம் என்று கிளம்பிய... தூள் கிளப்பிய நிறுவனத்தில் தான் கதை தொடங்குகிறது.
ஐரோப்பியாவில் அமைந்துள்ள CERN - அறிவியல் ஆய்வு கூடத்தில் ஒரு புதிய கண்டு பிடிப்பு. ஒரே எடை கொண்டுள்ள ஆனால் கனிம கூறுகளில் எதிர் மறை கொண்ட 'ஆண்டி மேட்டர்' என்று ஒரு மேட்டர்.
இறைவன் உலகை படைக்க இந்த செய்முறை தான் செய்து இருபரோ என்று ஒரு கேள்வியோடு மண்டையை சொரிந்து கொண்டு ஒரு தாத்தா. நல்ல தாத்தா
முழுமையாய் இன்னும் கண்டு பிடிக்கலை அதுக்குள்ள இதை உபயோகப்படுத்தி ஊரை அளிக்கும் ஒரு குண்டும் செய்யலாம் என்று ஒரு உபரி குண்டு/கண்டு பிடிப்பு .
இந்த குண்டை ஒரு மத அடிப்படையிலான ஒரு கூழு லவட்டி கொண்டு சென்று விடுகிறது. எப்படி தாத்தாவை கொலை செயது அவர் மார்பில் சூடு வைத்து நாங்கள் தான் இதை செய்தது என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். அது யார். அவர்கள் தான் இல்லுமினட்டி . உலக சுற்றுப் பாதை வட்டம் இல்லை முட்டை வடிவம் என்று சொல்ல போக, பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டி வீட்டு சிறையில் பூட்டப்பட்ட கலிலியோ சார்ந்த குழு. அறிவியல் ஆராய்ச்சி யாளர்களை ஒடுக்க பார்க்க, அவர்கள் எல்லாம் சேர்ந்து உருவாகிய ஒரு குழுதான் இது. இல்லுமினட்டி.
குண்டை இவர்கள் எடுத்த அந்த கணத்தில் இருந்து சரியாக 24 மணி நேரத்தில் அது வெடிக்கும். எடுத்தவர் என்ன செய்தார் இதை கொண்டு கிறிஸ்துவ தலைமை இடமான வாடிகன் நகரில் கொண்டு வைத்து விட்டார். அங்கே அந்நேரம் பார்த்து இறந்து போன போப் ஆண்டவருக்கு மாற்று தேர்வு செய்ய உலகில் உள்ள அத்தனை கர்தினல்களும் கூடி உள்ளனர்.
குண்டு எடுத்த குண்டன் குண்டை கொண்டு அங்கே வைச்சிட்டு நாலு கர்தினல்களையும் கடத்திகிட்டு போயிட்டான். தெனா வெட்டா தொலை பேசியில் கூப்ட்டு இந்தா பாரு குண்ட வைச்சிட்டேன் நாலு பேர கடத்திட்டேன். மணிக்கு ஒருத்தரா அத்தனை பேரையும் கொல்ல போறேன். கடைசியா குண்டும் வெடிக்கும் என்று சவால் விடுகிறான்.
கொல்ல போற இடம் தெரியல. என்ன செய்யுறது. வீட்டு சிறையில் இருந்தபோ நம்ம கலிலியோ தாத்தா எழுதுன ஒரு புத்தகத்தில் உள்ள விடுகதை விடை தெரிந்தால் கொல்ல போற இடம் தெரியும்.
இடம் தெரிஞ்சுச்சா குண்டு வெடிசுச்சா என்பது தான் கதை. கதை முடிவு சொல்லி நான் எதுக்கு பாவம் கட்டிக்கிறேன்.
சின்ன சின்ன தகவல்களில் நம்மை அசத்துவார் இந்த ஆள்.
பதின் மூன்றாம் நூட்ரண்டிலே இலக்கியம் என்ன வடிவம். நிச்சயம் தாளும் அச்சு பிரதியும் இல்லை. பின் எப்படி ? பப்பய்ரஸ் என்னும் வடிவம் பற்றி நமக்கு விளக்குவார். இன்று இந்த பப்பய்ரஸ் எப்படி பதப் படுத்தப்படுகிறது என்பதை பற்றியும் விளக்குவார்.
ஆனால் என்ன இன்னும் ஒரு நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்னும் சந்தர்பத்தில் வாடிகன் நகரில் சிலைகளின் மர்ம உறுப்பு உடைக்கப் பட்டது போப் ஆண்டவரின் உத்தரவில் என்ற தகவல் தருவார். கொலை நடந்த இடத்தில பிணத்தை வைத்து கொண்டு இல்லுமினட்டி குழு வரலாறு பாடம்.
ஆம்பிக்ராம் என்றழைக்கப்படும் தலைகீழாக திருப்பினாலும் அதே எழுத்துக்கள் தெரியும் வண்ணம் எழுதும் முறை. ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ் என்ற எழுத்தை தலை கீழாய் படித்து பாருங்களேன்நான் மேலே சொன்ன கதை சுருக்கத்திலே புரிந்து இருக்கும்.
துப்பறிதல் விடுகதை ஆன்மிகம் தத்துவம் அறிவியல் சரித்திரம் என்னும் அவியல் தான் அவர் கதை.
எல்லாம் சரி தான், படுக்காளி பசியாளி ஆகி அவியல் மாதிரின்னுட்டனே.