பக்கங்கள்

சராசரி மனிதனை சும்மா விடுங்க

பாமர மனது சர்ச்சைக்கு ஏங்குகிறது,
இல்லை என்றால் ஏன் இத்தனை பரபரப்பு.

இருபத்தி றோம் நூட்றான்டில் மிக நீளமான தொல்லை / தொலைந்த நேரம். ஆறு நிமிடங்கள் காணமல் போய் பின்னர் நாம் கண்டு பிடித்த சூரியன். உதய சூரியன். (அரசியல் அல்ல)

காலையிலே எழுந்து குளித்து வெறும் வயிறில் நீங்கள் பிரார்த்தனையில் மூழ்கி இருந்தாலோ, அல்லது தொலைகாட்சி பேட்டியின் முன் உக்காந்து மேதைகள் விளக்க உரையோடு, நகம் கடித்து கைகளை பிசைந்து கொண்டு பார்த்த கூடத்தில் இருந்தாலோ, மன்னிக்கவும் நான் உங்கள் கட்சி இல்லை. நான் சோத்து கட்சி.

ஊடகங்கள் கட்சை கட்டி கொண்டு சூரிய கிரகணத்துக்கு நேரடி ஒழி / ஒளி பரப்பு. கழுத்திலே கட்சை கட்டு, முதுகுக்கு பின்னால் கல்லா கட்டு.

இது ஒரு பூகோள நிகழ்வு. பிரத்தேயகமான ஒரு நாள். அவ்வளவுதானே, இதை ஏன் இவளவு பெரிசாக ஆக வேண்டும்.

பழைய காலத்தில் தீடிர் என்று இருள் சூழ மக்கள் பயந்து இருக்க வேண்டும். மேல் நோக்கி பார்த்த சிலருக்கு கண் நொள்ளை ஆகி இருக்க வேண்டும். எனவே இது போன்ற நாட்களில் அச்சம் கொண்டு அதை செய்யாதே, இதை செய்யாதே என்று சொல்லி இருக்க கூடும். அதை இன்று வரை கேள்வி கேட்காது செய்தால் எப்படி…. ஆன்மீக வாதிகளே அடங்குங்கள்!!!

சரி. அவன் உண்ண கூடாது என்ற உடன் நீங்கள் உண்டு விட்டால் ஆகி விட்டதா. ஆன்மீகத்தை குறை சொன்ன உடன் உங்கள் வேலை முடிந்ததா. பகுத்தறிவு பாசரைகளே பதுங்குங்கள்

சராசரி மனிதனை சும்மா விடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக