குட்டியா ஒரு கதை.
ஒரு ஊருல ஒரு நரி...... சரி......
குதிச்சு குதிச்சு திராட்சைய புடுங்க பார்த்துச்சு. சரி, வெரி நைஸ்.
கிடைக்காத்துனாலே, சீ சீ இந்த பழம் புளிக்கும் எனக்கு நாட் நெஸசரி என புட்டுக்கிச்சாம்.
கதை ஒகே, நீ என்ன சொல்ல வர்ரே அத சொல்லு என்பவருக்கு,
உங்களுக்கு CEO ஆகணுமா?
இல்லை என பதிலுரைப்பவர் ஒரு குழு. ஆம் என சொல்லுபவரில் இரு குழுக்கள்.
ஒருவர் CEO ஆனவர், மற்றவர் ஆவதற்கு முயல்பவர்.
இல்லை எனும் குழு பற்றிய கவலை இல்லை. சிஈஓ ஆனவர் தங்கள் பணியை மேலும் செம்மையாய் செய்யவும், முயல்பவர்கள் தெளிவு பெற்று முன்னும் முனைப்புடன் செயல்படவும் இப்பதிவு உதவும் என நம்புகிறேன்.
தலைவன் பதவியின் பரிசு முள் கிரிடம் என காட்டிய யேசு, எவன் ஒருவன் தலைவன் ஆக ஆசைப்படுகிறானோ அவன் அவர்கள் பாதங்களை கழுவி, தான் தொண்டர்களின் தொண்டன் என காட்டு என போதித்தவர்.
கிருபானந்த வாரியார் சொல்வார், தலைமைப் பீடத்தில் உனக்கு கிடைக்கும் சக்தியை உன்னை சார்ந்திருக்கும் கூட்ட்த்தின் மேன்மைக்காக பாடுபட கிடைத்த நிலை என்றே கொள்ள வேண்டும், இல்லாமல் உனக்கு கிடைத்த சுதந்திரமாய் மட்டும் கொண்டால் நீ தோற்பாய் என்பார்.
வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுதந்திரமும் பொறுப்பும் எதிர் எதிர் தட்டில் உள்ள தராசு. உன்னை யாரும் கேட்க கூடாது என நினைக்கிறாயோ அந்த அளவுக்கு உன் பொறுப்புணர்ச்சி வளர வேண்டும் என்பார்.
மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் வெறுமனே வாசித்து கடந்து செல்லும் தகவல்கள் அல்ல. மறுபடி மறுபடி படித்து புரிந்து அதை விவாதித்து தெளிவடைய வேண்டிய சமாச்சாரம்.
யாரும் அவர கேக்கிறதுல்ல, புடிச்ச்சா ஆபிஸுக்கு வர்றார், நினைச்சா அமெரிக்கா போறார். என்ன காரு, என்ன வீடு, அடேயப்பா அவர் எப்படியிருக்காரு என புற சமிக்கைகளை பார்த்து ஒருவர் தலைமை பீட்த்துக்கு ஆசைப்பட்டால் விவகாரமாகிவிடும்.
தலைமை என்பது பொறுப்பு, உங்கள் கீழே வேலை செய்யும் எல்லாரையும் சில சமயம் உங்களுக்கு தெரியாது. வாசலில் நிற்கும் வாயில் காப்போன் யார், அவன் பெயர் என்ன, அவன் குடும்பம் என்ன, பிள்ளைகள் எத்தனை, எங்கு படிக்கிறார்கள் என எதுவும் தெரியாது இருக்கலாம். ஆனாலும் உங்கள் வளர்ச்சியில் தான் அவன் வாழ்க்கை இருக்கிறது. அவனுக்கு ஒரு பத்து ரூபா கூடுதல் கொடுக்க உங்களால் முடிந்தால், அவன் பிள்ளைக்கு சாக்லேட்டாய் லேட்டாகாமல் கிடைக்கும்.
சந்தையிலே உங்கள் கம்பெனி வளர்ந்தால், அவன் சமூக மதிப்பு உயரும். அந்த கம்பெனியிலயா வேலை செய்யுற, நல்ல கம்பெனியாச்சேப்பா என சமூகம் அங்கிகாரம் தரும்.
இதை செய்யும் திடமும், தெளிவும், துணிவும், தீர்க்கமும் இருக்கிறதா. தென் ஆல் த பெஸ்ட், இல்லையா இதை செய்ய வேறு யாருக்காவது வழி விட்டு நாம் விலகுவது நல்லது. தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் தகராறு செய்தல் சிறுபிள்ளைத்தனம்.
(CEO)வின் வாழ்க்கை வாழ ஆசைப்படுவதில் தவறே இல்லை. அந்த வாழ்க்கைதான் வேண்டும் என்றால் ஒரு நாள், அல்லது ஒரு வாரம், ஒரு மாதம் வாழ்ந்து முடித்துவிடுவது நலம்.
பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவசியமே இல்லை, பால் பூத்துல போனா பட்டன் அழுத்தினா பால் வரும்
அத விட்டுபுட்டு வெறுமே ஒரு டம்ளர் பால் குடிக்க, பால்மாட வாங்கி வீட்டில கட்டினா பாலு கிடைக்கும் குடிக்கலாம் அதுவும் போக, குடம் குடமா கரக்கவும் செய்யலாம். ஆனா முக்கியமா முக்காம புண்ணாக்கு கரைக்கவும், சாணி அள்ளவும் தயாராகணும்.
தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சேவைதான் தலைமை பதவி. அரசியல், பிசினஸ், ஆன்மீகம் என எந்த தலைமைக்கும் இது பொருந்தும். நம் வாழ்க்கையை அப்படி தாரை வார்க்க ரெடியென்றால் அதை தலைமை (CEO) நோக்கி நகரணும், இல்லையா எனக்கு என்ன வேணும்ன்னு கேட்டுட்டுஅத நோக்கி நகரணும்.
//தலைவன் பதவியின் பரிசு முள் கிரிடம் என காட்டிய யேசு, எவன் ஒருவன் தலைவன் ஆக ஆசைப்படுகிறானோ அவன் அவர்கள் பாதங்களை கழுவி, தான் தொண்டர்களின் தொண்டன் என காட்டு என போதித்தவர்.
பதிலளிநீக்குகிருபானந்த வாரியார் சொல்வார், தலைமைப் பீடத்தில் உனக்கு கிடைக்கும் சக்தியை உன்னை சார்ந்திருக்கும் கூட்ட்த்தின் மேன்மைக்காக பாடுபட கிடைத்த நிலை என்றே கொள்ள வேண்டும், இல்லாமல் உனக்கு கிடைத்த சுதந்திரமாய் மட்டும் கொண்டால் நீ தோற்பாய் என்பார்.
வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுதந்திரமும் பொறுப்பும் எதிர் எதிர் தட்டில் உள்ள தராசு. உன்னை யாரும் கேட்க கூடாது என நினைக்கிறாயோ அந்த அளவுக்கு உன் பொறுப்புணர்ச்சி வளர வேண்டும் என்பார்.//
எல்லா மேட்டருமே சூப்பர் தான்... ஆனா, இது எதுவுமே எங்க “தல”க்கு ஒத்து வராதே... எதுக்கும் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்து விட்டு கேட்போம்...
நான் : அய்யா... நலம் நலமறிய அவா...
”தல” : நலம் விசாரிப்பு இருக்கட்டும்... எனக்கு விழா எதுவும் எடுக்கும் எண்ணம் இல்லையா..
நான் : அய்யா... இப்போ தானே போன வாரம் எடுத்தேன்...
“தல” : அது போன வாரம்... நான் கேக்கறது இந்த வாரம்...
வாங்க, எடக்கு மடக்கு காரரே...
பதிலளிநீக்குவிழா நல்லதுதான். பாராட்டும் நல்லதுதான். வழக்கம்போல் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம், குத்தாட்டம் எல்லாம் உண்டா.
இந்த ஹாலிவுட்லருந்து ஜாலியா சில டான்ஸ் எல்லாம் கொஞ்சம் .... மிரட்டி!!!! கூட்டிட்டு வந்தா இன்னும் நல்லா கலை கொட்டும் களை கட்டும்.
நம்ம ஜாக்கி ஜான் கூட ஐய்யா பாருங்கய்யா எங்கள மிரட்டுறாங்கன்னு பிராது கொடுக்க ரோசிப்பாரு, யாராவது ஸ்டண்ட் பார்ட்டியயும் ரெடி பண்ணுனா கம்ளய்ண்ட் கொடுக்க வசதியா இருக்கும்.
//பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவசியமே இல்லை, பால் பூத்துல போனா பட்டன் அழுத்தினா பால் வரும்
பதிலளிநீக்குஅத விட்டுபுட்டு வெறுமே ஒரு டம்ளர் பால் குடிக்க, பால்மாட வாங்கி வீட்டில கட்டினா பாலு கிடைக்கும் குடிக்கலாம் அதுவும் போக, குடம் குடமா கரக்கவும் செய்யலாம். ஆனா முக்கியமா முக்காம புண்ணாக்கு கரைக்கவும், சாணி அள்ளவும் தயாராகணும்.//
தலைவா... தத்துவம் சொல்றதுல நீங்க ஒரு பெரிய டெர்ரர் புரட்சியே பண்ணி இருக்கீங்க...
சூப்பரா கீதுபா....
வாங்க தலைவா,
பதிலளிநீக்குஏழைக்கேத்த எள்ளுருண்டை, CEO aspirant க்கு கொடுக்கிற அட்வைஸ்ல பாருங்களேன்,தப்பு தப்பா மாட்டுக் கொட்டையில் இருக்கு.
தத்துவம் தாறுமாறா இருக்கு பாருங்க.....
ஆனாலும் இதுல லேசா ஒரு இரவல் வாங்கினது தெரியும் பாருங்களேன்.
எலித்தொல்லைக்கு பயந்து பூணை வளர்த்து பின்ன மாட்டிக்கிடுவாரே.... ஒரு சாமியார் மாமியார் பிடிக்கும் கதை அதுல இருந்து லேசா இன்சிபிரேஷன் கிடைச்சுச்சு.
தேங்க்ஸ் தலைவா.
கலக்குங்க... அது என்ன பேரு?
பதிலளிநீக்கு//பால் குடிக்க ஆசைப்பட்டா, பால் மாட வாங்கணும்னு அவசியமே இல்லை, பால் பூத்துல போனா பட்டன் அழுத்தினா பால் வரும்
பதிலளிநீக்குஅத விட்டுபுட்டு வெறுமே ஒரு டம்ளர் பால் குடிக்க, பால்மாட வாங்கி வீட்டில கட்டினா பாலு கிடைக்கும் குடிக்கலாம் அதுவும் போக, குடம் குடமா கரக்கவும் செய்யலாம். ஆனா முக்கியமா முக்காம புண்ணாக்கு கரைக்கவும், சாணி அள்ளவும் தயாராகணும்.//
---))Super
நல்ல கருத்து எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி கீறேனே தல....
பதிலளிநீக்குநம்மளுக்கு CEO ஆவுற ராசி கீதான்னு பாத்து சொல்லுபா...
ஒரே வார்த்தைல சொல்லு தல - கீதா, லேதா..
annamalaiyaan
பதிலளிநீக்குeasylife
kvadivelan
Rajeshh
Karthi6
urvivek
Mahizh
jntube
kosu
kingkhan1
மேற்குறிப்பிட்டுள்ள அத்தனை அன்பு இதயங்களுக்கும் நன்றி. படித்து தங்கள் வாக்குகளையும் தமிழிஷ்ல் இட்டு என்னை ஊக்கப்படுத்திய தங்கள் உறுதுணைக்கு சிரம் தாழ்ந்த நன்றி.
பெருவாரியாய் மக்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தி தந்த தமிழிஷ்க்கும் நெஞ்சார்ந்த நன்றி.
தங்கள் ஆதரவை என்றும் வேண்டும்,
படுக்காளி,
வாங்க, அண்ணாமலையான் தங்கள் வரவு நல்வரவாகுக.
பதிலளிநீக்குசுஜாதா, பாலகுமாரன் ரசிகன் என தங்கள் புரோபைல் படித்த போது, ஆஹா... என் ரசனையை போலவே இருக்கிறதே என ஆச்சர்யப்பட்டேன்,
கை கட்டி நிக்குறதுனால விவேகானந்தர் இல்லைன்னு படிச்சப்போ, ஆஹா... நல்ல ஆன்மிக ஆர்வமும், நகைச்சுவையும் மின்னுதேன்னு தோணுச்சு.
நல்ல நண்பரை சம்பாதித்தேன் என நம்புகிறேன்.
//// சொன்னது…
கலக்குங்க... அது என்ன பேரு? ////
படுக்காளி எனும் என் பட்டப் பெயரை கேட்கிறீர்களோ.
டேய்.... போடா படுக்காளி என என் பாட்டி / ஆச்சி சொல்வார். சேட்டைக்காரன் என பொருள் படும், கொஞ்சோண்டு சேட்டையை ரசித்து கொஞ்சும் வாக்கு பிரயோகம்.
வாருங்கள் ஈ ரா வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஎழுதி முடித்து விட்டு படித்த போது, எனக்கு தோணுச்சு, ஈராவுக்கு இது புடிக்கும்ன்னு.
அதெப்படி மறுபடி கரெக்டா எனக்கு பிடிச்ச ஏதோ வந்து அமைந்த வார்த்தை கோர்வையை சுட்டிக் காட்டுகிறீர்கள்.
நன்றி.
படுக்காளி.
///// R.Gopi சொன்னது…
பதிலளிநீக்குநல்ல கருத்து எல்லாம் பின்னூட்டத்துல சொல்லி கீறேனே தல....
நம்மளுக்கு CEO ஆவுற ராசி கீதான்னு பாத்து சொல்லுபா...
ஒரே வார்த்தைல சொல்லு தல - கீதா, லேதா.///
ராசி, கீதா, லேதா இதெல்லாம் பொட்டப் புள்ளங்க பேராவுல்ல இருக்கு.
இதுல கீதா நல்லதா லேதா நல்லதா என சட்டுண்ணு சொல்ல தெரியல.
ஏன் எடக்கு மடக்கு காரரே, யாருக்காவது பேர் வைக்கிற பொருப்பை உங்ககிட்ட கொடுத்துட்டாங்களோ...
அது இருக்கட்டும் இந்த CEO ... CEO .... ங்கிறாங்களே, அது என்னது, எந்த கடையில கிடைக்கும், என்ன விலை கொடுக்கணும்.
" தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சேவைதான் தலைமை பதவி. "..
பதிலளிநீக்குநல்லா சொன்னீங்க.. இங்க பல பேர் தலைவனாயிட்டா.. எல்லாரையும் மிரட்டி வாழலாம்னு நினைச்சி வாழுறாங்க..
ரொம்ப நாள் ஆச்சு.. அடுத்த பதிவு எப்போ தலைவா??..
/// பஹ்ரைன் பாபா சொன்னது…
பதிலளிநீக்கு" தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சேவைதான் தலைமை பதவி. "..
நல்லா சொன்னீங்க.. இங்க பல பேர் தலைவனாயிட்டா.. எல்லாரையும் மிரட்டி வாழலாம்னு நினைச்சி வாழுறாங்க..
ரொம்ப நாள் ஆச்சு.. அடுத்த பதிவு எப்போ தலைவா??..////
வாங்க பாபா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மிக சரியாக சொன்னீர்கள்.
போட்டுட்டேன் தலைவா அடுத்த பதிவு. ஒரு ஸ்பெஷல் நன்றி. அடுத்த பதிவு போட வைத்த தங்கள் உந்துததுலுக்கு.