பக்கங்கள்

கிறிஸ்தவ தவம்

இன்று கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் அடங்கிய தவக் காலத்தை தொடங்குகின்றனர். தவக்காலத்தின் தொடக்கமாய் இன்று சாம்பல் புதன். கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் தறிக்கும் சடங்கு இன்று தான். குருவானவர் சாம்பலை எடுத்து ‘மண்ணில் இருந்து பிறந்தவன் நீ, மண்ணுக்கே திரும்புவாய் என வாழ்வின் ஒரு பரிமாணத்தை காட்டி பூசுவார்.

இந்த 40 நாட்களும் நாலு கோட்பாடுகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது

பிரார்த்தனை

சுய பரிசோதனை மற்றும் நாளைய திட்டத்துக்கான தீர்மானம்

பிறர்க்கு உதவி செய்தல்

தன்னை ஒறுத்தல்

நாவுக்கு பிடித்த உணவுகளை தவிர்த்து, வாரத்தில் ஒரு நாள் ஒரு நேரம் உண்ணாமல் இருப்பது, சிறப்பு பிரார்த்தனைகள் போன்ற சில செயல்களால் உடலையும் உள்ளத்தையும் சுத்தம் செய்வது இதன் நோக்கம்.

பைபிள் தகவல்களின் படி யேசுவை பற்றிய சுவாரசியமான தகவல் உண்டு.
மனிதனாய் பிறந்த அவர், அறிவில் முதிர்ந்து மத குருமாரிடம் வாதம் செய்தார் என சொல்லப்படுகிறது, பின்னர் தன் தந்தைக்கு தச்சு வேலையில் உதவி செய்தார் எனவும் சொல்லுகிறது. சுருக்கமாய் சொன்னால் ஒரு மனிதனாக இருந்தார். மனிதர் புனிதர் ஆனது எப்படி.


முக்கிய திருப்பமாக, ஒரு 40 நாள் பாலைவனத்துக்கு சென்று செய்யும் பிரார்த்தனையில் தன்னை உணர்ந்தார்.

தவக் காலம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுள் கிறிஸ்துவை தேடும் நேரம் என வாசிக்கும் போது அதன் மேன்மை தெரிகிறது.

ஆன்மிக பலம் பெற எல்லா கிறிஸ்தவ சகோதரரையும் வாழ்த்துவோம்.

2 கருத்துகள்:

  1. " ஆன்மிக பலம் பெற எல்லா கிறிஸ்தவ சகோதரரையும் வாழ்த்துவோம் "..மத ஈகோ வை ஒழித்துவிட்டால்..ஆன்மிகம் என்ற மிக புனிதமான பயணத்தை ரசித்து அனுபவிக்க முடியும் என்பது என் கருத்து... விரதத்தின் முழுமையான காரணத்தை அறியாமல்.. மத உள்நோக்கோடு செய்யும்பொழுது.. அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய்விடும்... எல்லா மதமும் நன்னெறிகளை கற்றுக்கொடுக்கிறது..

    தான் பிறக்க வைக்கப்பட்ட மதத்தை புரிந்து கொள்வதற்கு முன்பு.. மொத்தமாக உள்ள எல்லா மதங்களின் சாராம்சங்களை புரிந்து கொள்வது நன்று.. இது பொதுவான என் கருத்து..

    யாதும் ஊரே..யாவரும் கேளிர்..

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள ஒரு வலைப்பூ:

    http://moreshareandcare.blogspot.com/

    பதிலளிநீக்கு