பக்கங்கள்

உடையத உட்டுட்டு உருளுரத பிடிச்சிபுட்டோம்

சாப்டுறது எதுக்கு ????
மக்கா!!! சத்தா இருக்கதுக்கு.......
நம் அத்தனை பேரின் வயிற்றில் , உண்ணும் உணவை செறிக்க வைக்க ஒரு ரசாயன தொழிற் சாலை.

ஒரு மாமிசத்தை தகிக்கும் ரசாயணம் கீரைக்கு அவசியம் இல்லை.
கீரையை தகிக்கும் ரசாயணம் மாமிசத்திடம் தோற்று விடும்.

உண்ணும் உணவின் தன்மையை அனுசரித்து ஏற்ற இறங்கங்கள் அவசியம்.

சரி இதை அறிந்து கொள்வது எப்படி.

கண்கள் வழி சில தகவல்கள், மூக்கின் வழி மணமாய் சில தகவல்கள். இவற்றை ஆலோசித்து உடனடியாய் தடாலடியாய் ஒரு கலவை உண்டு செய்து எச்சில் வழி அனுப்பும் விந்தை.

அகஸ்மாத்தாக சுவையான மணம் அடித்தாலோ அல்லது உணவை பார்த்தாலோ நம்மை அறியாமல் வாயில் எச்சில் ஊறி பாவம் போலே சில நேரம் நிற்கும் கதை வேறு உண்டு.

ஒரு கேள்வி ?????

எத்தனை தரம் நம் உடல் தேவை அறிந்து அதற்காக மட்டும் நாம் உணவு உண்டு இருக்கிறோம். காய்ச்சல், வாய்வு புடிப்பு போன்ற தருணங்களை தவிர்த்து விட்டால்.

சுவை என்னும் சுகம், வயிறு நிரம்பிய உடன் கிடைக்கும் நிறைவு என்னும் பக்க விளைவுகளை மட்டுமே பக்கவாக எதிர் பார்த்து இருக்கிறோம்.

உண்பதில் மாத்திரமா ??

இன்னும் எத்தனை விடயங்களில்

உடுத்துவதில் ..............
உழைப்பதில் ..............
உடலுறவில் ..............
உறவாடுவதில் ..................
உரையாடுவதில் .................
இதை தான் படைத்தவன் படைத்தான் உலகுக்காக
மனிதன் பிரித்தான் அவனுக்காக

என்பதோ.

இது தான் நடு மரணத்தின் கனியோ.... , கீழ்படியாமையின் செயலோ.........

சம்மனசும் சாத்தானும் / ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ்.


சமிபத்தில் திரை அரங்குகளை வந்தடைந்த டேன் பிரவுன் நாவல் ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ்.

நாவல் படித்து விட்டேன். இன்னும் படம் பார்க்கவில்லை. இந்த வார இறுதியிலே செல்ல திட்டம் உண்டு. பார்த்து விட்டு ஒரு திரை விமர்சனம் எழுதும் ஆசையும் உண்டு. அதற்கு முன்னோடியாய் இதை எழுத நினைத்தேன்.

நிறைய பேருக்கு அவரை பிடிக்காது. அவர் பெயர் கசக்கும் ஒரு எட்டி காய். எனக்குஎன்னாவோ நிறை குறையோடு பார்த்து நம் தகவல்களை தேத்தி கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. எந்த குழுவையும் நாம் சார வேண்டாம். அவர் பக்கமும் போக வேண்டாம். தகவல்கள் கேட்டு விட்டு நம் அறிவை விருத்தி செய்து கொள்வோம் என்று முடிவெடுத்தால் அவர் ஒரு தகவல் பெட்டகம்.

அவர் நிறை

துப்பறிதல் விடுகதை ஆன்மிகம் தத்துவம் அறிவியல் சரித்திரம் என்னும் அவியல் தான் அவர் கதை. ஒரு பிரச்சினை, எது நிஜம் எது கற்பனை என்று தெரியாமல் நாம் விழிப்போம்.

ஒரு கொலையில் அவர் கதையை தொடங்குவார். பரபரப்பாய் கதையை முழு வேகத்தில் ஓட்டுவார். நாயகனையும் நாயகியையும் ஓட ஓட வைப்பார். மாய்ந்து மாய்ந்து விடுகதை விடுவிக்க சொல்லுவார். நமக்கு தெரியாத புது புது தகவல்கள் சொல்லி கதையின் போக்கில் நமக்கு சரித்திர பாடம் நடத்துவார். அறிவியல் பாடம் நடத்துவார். தத்துவ விசிறி வீசி, கதை முடிந்ததும் நம்மை நிறைய யோசிக்கவும் தகவல்களை யாசிக்கவும் வைப்பார்.

கதை என்ன :

www. என்னும் வலைஉலகம் உருவாக்கியது யார். 2008 ல் உலகம் உருவானது எப்படி என்று கண்டு பிடிக்க போகிறோம் என்று கிளம்பிய... தூள் கிளப்பிய நிறுவனத்தில் தான் கதை தொடங்குகிறது.

ஐரோப்பியாவில் அமைந்துள்ள CERN - அறிவியல் ஆய்வு கூடத்தில் ஒரு புதிய கண்டு பிடிப்பு. ஒரே எடை கொண்டுள்ள ஆனால் கனிம கூறுகளில் எதிர் மறை கொண்ட 'ஆண்டி மேட்டர்' என்று ஒரு மேட்டர்.

இறைவன் உலகை படைக்க இந்த செய்முறை தான் செய்து இருபரோ என்று ஒரு கேள்வியோடு மண்டையை சொரிந்து கொண்டு ஒரு தாத்தா. நல்ல தாத்தா

முழுமையாய் இன்னும் கண்டு பிடிக்கலை அதுக்குள்ள இதை உபயோகப்படுத்தி ஊரை அளிக்கும் ஒரு குண்டும் செய்யலாம் என்று ஒரு உபரி குண்டு/கண்டு பிடிப்பு .

இந்த குண்டை ஒரு மத அடிப்படையிலான ஒரு கூழு லவட்டி கொண்டு சென்று விடுகிறது. எப்படி தாத்தாவை கொலை செயது அவர் மார்பில் சூடு வைத்து நாங்கள் தான் இதை செய்தது என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். அது யார். அவர்கள் தான் இல்லுமினட்டி . உலக சுற்றுப் பாதை வட்டம் இல்லை முட்டை வடிவம் என்று சொல்ல போக, பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டி வீட்டு சிறையில் பூட்டப்பட்ட கலிலியோ சார்ந்த குழு. அறிவியல் ஆராய்ச்சி யாளர்களை ஒடுக்க பார்க்க, அவர்கள் எல்லாம் சேர்ந்து உருவாகிய ஒரு குழுதான் இது. இல்லுமினட்டி.


குண்டை இவர்கள் எடுத்த அந்த கணத்தில் இருந்து சரியாக 24 மணி நேரத்தில் அது வெடிக்கும். எடுத்தவர் என்ன செய்தார் இதை கொண்டு கிறிஸ்துவ தலைமை இடமான வாடிகன் நகரில் கொண்டு வைத்து விட்டார். அங்கே அந்நேரம் பார்த்து இறந்து போன போப் ஆண்டவருக்கு மாற்று தேர்வு செய்ய உலகில் உள்ள அத்தனை கர்தினல்களும் கூடி உள்ளனர்.

குண்டு எடுத்த குண்டன் குண்டை கொண்டு அங்கே வைச்சிட்டு நாலு கர்தினல்களையும் கடத்திகிட்டு போயிட்டான். தெனா வெட்டா தொலை பேசியில் கூப்ட்டு இந்தா பாரு குண்ட வைச்சிட்டேன் நாலு பேர கடத்திட்டேன். மணிக்கு ஒருத்தரா அத்தனை பேரையும் கொல்ல போறேன். கடைசியா குண்டும் வெடிக்கும் என்று சவால் விடுகிறான்.

கொல்ல போற இடம் தெரியல. என்ன செய்யுறது. வீட்டு சிறையில் இருந்தபோ நம்ம கலிலியோ தாத்தா எழுதுன ஒரு புத்தகத்தில் உள்ள விடுகதை விடை தெரிந்தால் கொல்ல போற இடம் தெரியும்.

இடம் தெரிஞ்சுச்சா குண்டு வெடிசுச்சா என்பது தான் கதை. கதை முடிவு சொல்லி நான் எதுக்கு பாவம் கட்டிக்கிறேன்.


சின்ன சின்ன தகவல்களில் நம்மை அசத்துவார் இந்த ஆள்.

பதின் மூன்றாம் நூட்ரண்டிலே இலக்கியம் என்ன வடிவம். நிச்சயம் தாளும் அச்சு பிரதியும் இல்லை. பின் எப்படி ? பப்பய்ரஸ் என்னும் வடிவம் பற்றி நமக்கு விளக்குவார். இன்று இந்த பப்பய்ரஸ் எப்படி பதப் படுத்தப்படுகிறது என்பதை பற்றியும் விளக்குவார்.

ஆனால் என்ன இன்னும் ஒரு நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்னும் சந்தர்பத்தில் வாடிகன் நகரில் சிலைகளின் மர்ம உறுப்பு உடைக்கப் பட்டது போப் ஆண்டவரின் உத்தரவில் என்ற தகவல் தருவார். கொலை நடந்த இடத்தில பிணத்தை வைத்து கொண்டு இல்லுமினட்டி குழு வரலாறு பாடம். ஆம்பிக்ராம் என்றழைக்கப்படும் தலைகீழாக திருப்பினாலும் அதே எழுத்துக்கள் தெரியும் வண்ணம் எழுதும் முறை. ஏன்ஜெல்ஸ் அண்ட் டெமேன்ஸ் என்ற எழுத்தை தலை கீழாய் படித்து பாருங்களேன்

நான் மேலே சொன்ன கதை சுருக்கத்திலே புரிந்து இருக்கும்.
துப்பறிதல் விடுகதை ஆன்மிகம் தத்துவம் அறிவியல் சரித்திரம் என்னும் அவியல் தான் அவர் கதை.

எல்லாம் சரி தான், படுக்காளி பசியாளி ஆகி அவியல் மாதிரின்னுட்டனே.


விரைவில் எதிர் பாருங்கள் .....


விரைவில் எதிர் பாருங்கள்
உங்கள் அபிமான 'அப்ராணி அம்மாஞ்சி ' வெடிக்கும் ....
வெடித்து தெரிக்கும் !!!
( திரைப்படத்திற்கு இப்படி ஒரு ட்ரைலர் போடுவார்கள்.
இலக்கியம் என்ன இழைத்தா போயிற்று )


*********** அதல குஜல அப்ராணி அம்மாஞ்சி ****************

பொன் நிற சூரிய கிரகணம் ரத்தினகிரி சாலையை தொட்ட அந்த தருணம் நான் வெளி முற்றத்தில் சம்பாஷித்துக் கொண்டு இருந்தேன்.

என் பெயர் இன்ப சேனன்.

நான் கல்வியில் பூரண பாண்டித்துவம் பெற்ற போது என்னை பண்டிதர் கொண்டாடுவார் என்று எண்ணி ஏமாந்தேன்.

ஆனால் என் உபாத்தியார் தலையில் கூட்டினார்.

தலை தடவிக் கொண்டு கேட்ட போது, என் தொல்லை தாங்காது பள்ளியில் இருந்து துரத்த எண்ணியே எனக்கு பாண்டித்துவம் பரிசளித்ததாய் பகர்ந்தார்.

ரொம்ப வலி.

ஆனாலும் நான், யெவ்வன புருஷன். ......................



பிரபாகரன் - கண்ணீர் தேசம்

தமிழ் என்ற உணர்வு ரத்தத்தில் கொஞ்சம் அதிகப்படியாக இடம் பிடித்த கூட்டம் நாம். வேறு எந்த மொழி பேசுபவருக்கும் இல்லாத ஒரு பிரத்யேக மொழி வாஞ்சை, முரட்டு அன்பு நமக்கு உண்டு.

நம் அண்டை நாட்டில் நம் மொழி பேசும் கூட்டம், அதை நம் கூட்டம் என்று மனதில் கொண்டுள்ளோம்.

இன்று மிக துன்பத்தில் உள்ளது.

பிரபாகரன் நமக்கு நன்கு அறிமுகமாகி இன்று நம்மை விட்டு பிரிந்தும் இருக்கிறார். அவர் இறப்பை எப்படி பார்க்க என்று குழம்பி இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.

இறந்து போன ஒரு மனிதரை பழித்து பேசுவது முறை அல்ல என்ற தார்மீக சிந்தனை அல்லாது, ஓவ்வொரு மனிதனின் செயலும் சூழ்நிலையின் வெளிபாடு என்று நம்புவதால் எழுந்த எண்ணம் இது.

வன்முறை ஆதரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என்றாலும் ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்ற புனித சிந்தனை சாமானியருக்கும் வருமா என்ற கேள்வியும் உண்டு.

ஒரு தனி மனிதனாய் தொடங்கிய பயணம் ஒரு நாட்டையே ஆட்டி படைத்தது என்றால் ஜீரணிக்க கஷ்டம் ஆனா ஒரு வாழ்கை அது. பெரிய ஆற்றல் உடைய மனிதர் தான் இதை செய்ய முடியும்.

ஆற்றலும் வீரமும் விவேகமும் உள்ள ஒரு கூட்டத்தை சமைத்து விடுதலை தேடிய அவர் வேட்கை புரிவது கொஞ்சம் கஷ்டம். சராசரி பாதுகாப்பான நம் வாழ்கை போல் அல்லாது ரத்தத்திலும் மரணத்திலும் துரோகத்திலும் வாழ வேண்டிய ஒரு துர்பாக்கியமான வாழ்வு பெற்ற அவருக்கு நம் இரங்கல்கள்.

அவரின் தாக்கும் அணுகுமுறை நமக்கு சற்றே அன்னியம். என்றாலும் அவர் அந்த ஆயுதத்தை கையில் எடுக்க வாய்த்த சூழ்நிலையும் நமக்கு அன்னியம்.

தாய் தந்தையை கண் முன்னால் சுட்டு கொன்று, ஆறு மிருகங்கள் ஒரே நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்த பின் ஒரு பெண் / அல்லது பூவை குளித்து முடித்து அஹிம்சை போதிக்க வேண்டும் என்று நாம் சொல்லுவதோ எதிர்பார்ப்பதோ மடமை.

புலிகளின் வீழ்ச்சி ஒரு தீர்வாகுமா.

என் மொழி பேசுவதால் என் சகோதரன் சகோதரியாய் நான் பார்க்கும் இந்த மக்கள் கூட்டம் அமைதி பெறுமா.

மன்னித்து விடுங்கள்

ஒரு அத்தியாயம் எழுதி விட்டு பாதியில் விட்டு விட்டாயே ஏன். ...
இரண்டாம் பகுதி எப்போது ....

என்று அற்புத மணல் மாதா கோவில் பதிவு பற்றிய மின்னஞ்சல் சில கிடைக்க பெற்றேன்.

ஒரு தவறு செய்து விட்டு வெட்கப் பட்டு கூட்டுக்குள் பதுங்கி விட்ட நிலையே படுக்காளிக்கு.

அவசரம் அவசரமாய் எழுதியதால் தாறு மாறாய் தப்பு தப்பு தகவல்கள் அந்த முதல் அத்தியாயத்தில். கற்பனை செய்யும் சுதந்திரம் உண்டு என்றாலும் ஒரு வருடத்தில் நடந்ததை ஒரு நாள் என்று எழுதுவது அரை வேக்காட்டு தனம்.

மன்னித்து விடுங்கள்.

சிறிய ஆராய்ச்சிக்கு பின் அதை எழதுவது என்று முடிவு எடுத்து உள்ளேன்.

ஒரு வார அவகாசம் வேண்டுகிறேன்.

தேர்தல் முடிஞ்சுச்சு.!!!

நான் போட்ட தேர்தல் நிலவரம் பதிவு மறுபடி படிச்சு பார்த்தேன்.
கேரளா, மூன்றாம் அணி பத்தி சொன்னது சரி ஆச்சு.
ஆனா அம்மா பத்தி சொன்னது ரிவேர்ஸ் ஆச்சு.
குதிரை பேரம் நடக்கும் என்று நான் சொன்னது தப்பா ஆச்சு.

கூட்டணியிலே விட்ட கோட்டை பெரிய ஓட்டையா தான் இருக்கு என்று நான் சொல்ல - காலம் அதை திருத்தி இப்படி எழுதி விட்டது.
கூட்டணியில் விட்ட கோட்டை நல்ல வேட்டை.

இல்லேனா அனாவசியமா இடது, லாலு, மாம்பளம்னு தேவை இல்லாம வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கனும். குடும்பத்துல உள்ள எல்லோருக்கும் பதவி கேட்பது ஒரு தொந்தரவுதான், ஆனா ஊடு செங்கல் உருவறது இல்லாததால தி மு கா பரவாயில்லை என்று காங்கிரஸ் நினைத்திருக்கும்.

காங்கிரஸ் காட்டிலே மழை.

அடிப்படையா பார்த்தா - மன் மோகன், அத்வானி, இவர்களில் முன்னவர் பெட்டர். வாக்காளர் இப்படி யோசிச்ச முடிவு மாதிரி தெரியுது. இப்ப ஓட்டை போடுங்க, நாங்க கூடி கும்மி அடிச்சு ஒரு தலைவன அல்லது தலைவிய தேர்ந்தெடுப்போம் என்ற வாதம் பிடிக்கவில்லை போல் தோன்றுகிறது

தோல்வியை ஒத்து கொண்டு - எதிர்பாராதது, காங்கிரசுக்கு வாழ்த்துகள் என்று தொலைபேசியில் பேசிய அத்வானியை பிடித்தது. ஆனா இதே ஆளு அந்த அப்புராணி மன் மோகன் சிங்கை சோம்பேறி என்று பிரச்சாரத்தில் பேசியது நினைவுக்கு வந்து மறந்தும் போனது.

ஜெயிச்சது சரி. அதுக்கு காரணம் ராகுல் அவர மந்திரி ஆக்குவேன், என்ற பேச்சு காங்கிரசுக்கு வேண்டுமா. செய்யனுமுனா செய்ங்க, செய்யுறதா சத்தம் இல்லாம செய்யுங்களேன்பா

டாக்டர் ஐயா சுறுசுறுப்பாய் அணியை மாத்தி அம்மாகிட்ட வந்ததும், கூட்டணி பலம் ஆனதும் வெற்றி நமக்கே என்ற தோரணையில் அம்மா நடந்ததும் கொஞ்சம் ஆட வெட்டுறதுக்கு முன்னாலே ______ சுட்ட கதையோ.

விஜய காந்த பலம் பரவாயில்லை. ஆனா நாயர் பிடிச்ச புலி வால் கதையா, அம்மாவையும் ஐயாவையும் சரி இல்லேனு சொல்லிட்டு கூட்டணியும் வைக்க முடியாம, ஜெயிக்கவும் முடியாம தவிக்கிராரோ.

வை கோ வின் இந்த தேர்தல் தோல்வி துக்கம் தான். ஆனால் எல்லார் கையிலேயும் நோட்ட திணிச்சு என்ன தோக்க அடிச்சிட்டாங்க என்று சொல்லுவது, தலைவனுக்கு அழகா. வெற்றியை சமாளிக்க எந்த முட்டாள்களாலும் முடியும், ஆனால் தோல்வியை சந்திக்க ஒரு வீரம் விவேகம் வேண்டும் என்ற பழமொழி நினைவில் கொண்டால் இந்த அடி ஒரு படி ஆகும்.

தேர்தலில் செயிப்பது எப்படி என்று அஞ்சா நெஞ்சன் கிளாஸ் எடுக்கலாம். சொல்லி சொல்லி நோட்டையும் ஆட்களையும் வெற்றியையும் அடிப்பது அவரின் தனித்துவம்.

காசு வாங்கிகிட்டு ஒட்டு போட்டாங்க என்ற குற்ற சாட்டு எப்போதும் உண்டு.

எனக்கு தெரியலே, அதால கேட்கிறேன். உயர் மட்டத்திற்கும், நடுத்தர வர்கத்திற்கும் இவங்க காசு கொடுக்கிரதில்லே. அப்போ ஏழை பாளை மட்டும் தான் இந்த காசு வாங்கிகிட்டு ஒட்டு போடுரன்களோ. சரி காச வாங்கிட்டு மாத்தி போடுங்கன்னு சொன்னாலும் கேட்காம சரியாதான் குத்துராங்க இப்ப அமுக்குராங்க.

சிங்கம், கரடி - கார்த்திக், விஜய ராஜேந்தர் அணில் முயல் எல்லாம் அடுத்த தேர்தல் வரை ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த தேர்தல் வந்ததும் மறுபடி வந்து எங்களை கிச்சு கிச்சு முட்டனும்னு சங்கம் சார்பா கேட்டுகிறேன்.

வெற்றி பெற்ற இன்னொரு சிங்கத்துக்கு (ஜெ கே ரித்தீஷ் )சங்கம் சார்பா வாழ்துக்கள் .

அஞ்சு வருஷம் ஆண்ட அதே ராசா மறுபடி பதவிக்கு வந்து இருக்கிறார், சில மாற்றங்களோடு. ஆனா இவர் தான் ராசா இது இப்படி தான் அது அப்படிதான்னு சொல்லுரகுக்கு வேற எதாவது மார்க்கம் இருந்துச்சுனா நாம செலவழிச்ச தேர்தல் பணத்திலே நாட்ட தூக்கி நட்ட குத்தல் ஆக்கியிருக்கலாமே என்று ஒரு நப்பாசை.

வேற ஒண்ணும் இல்லை, இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாத மன்னர் ஆட்சியில வாழ்ந்து கொண்டு இருக்கிற பாதிப்பு படுக்காளிக்கு

மச்சான் தயவு இருந்தா மலை ஏரி புளைக்கலாம்.

'மச்சான் தயவு இருந்தா மலை ஏரி புளைக்கலாம்'

'முத்து குளிக்க வாரிகளா'


இரண்டில் ஒன்று தலைப்பாய் கொள்ளலாம் என்று எண்ணம்.

என்னடா படுக்காளி இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற... என்று கேட்பது கேட்கிறது.


பாண்டி நாட்டு முத்து ரொம்ப பிரபலம்.பல பல நுற்றாண்டுகளாய்.
அந்த முத்து நகர் சார்ந்த ஒரு தகவல் இது.

முத்து எடுப்பது என்பது, சிப்பியை பிளந்து முத்தை புடுங்குவது.
சிப்பியை எடுப்பது முத்து குளிப்பது.

மேற்படி விவரங்கள்.

என்று முத்து குளிப்பது அரசு உடமையாய் ஆக்கப் பட்டு, முத்து ரத்தானதோ, அதற்கு முந்திய கால கட்டத்தில் உருவான ஒரு சமூக பழ‌க்கம் இது.

முத்து குளிக்க கடலின் உள் செல்லும் முன், அவன் இடுப்பில் கயிறு கட்டி அதன் மறு முனையை தோழ‌னுக்கு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். கடலின் ஆழத்தில் முச்ச‌டக்கி செல்லும் மீனவன், சில நேரம் மயங்கி விழும் அபாயம் உண்டு. இடுப்பில் கட்டிய கயிரு பதத்தில் அதன் அசைவு கொண்டு கடலுக்கு அடியில் உள்ள விவரம் தெரியும் புத்திசாலித்தனம் உண்டு சக தோழ‌னுக்கு.

அதே நேரத்தில் உன்னிப்பாய் இருந்து கயிறு தூக்கி விட வேண்டிய கட்டாயம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் சுருக்கில் உள்ளது உள்ளே சென்ற தோழனின் உயிர். உயிர் விலை தெரிந்து செய்ய வெண்டிய வேலை இது. யாரிடம் கொடுபது இந்த வேலையை. சரி மரபு படி இந்த வேலையை யார் செய்தார்கள். காலம் காலமாய் அவர்கள் கொடுத்தது இவரிடம். மச்சான். உறவு முறையில் மைத்துனன். அதாவது பெண்டாட்டியின் உடன் பிறந்தவன். கடலும் கடல் சார்ந்த இடத்தில் இப்படி ஒரு பழக்கம் என்றால், மலையும் மலை சார்ந்த இடங்களில் தேன் எடுக்க செல்லும் போதும், இந்த கயிறு கட்டி கொடுத்தது தாலி கயிறு தொடர்பிலே தான்.

ஒரு நிமிடம் சிந்தித்தால் இந்த ஆழமான உறவு,
உயிரையே நம்பி ஒப்படைக்கும் உறவு இன்று உண்டா....