பக்கங்கள்

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு – சிந்தனை 2

உங்களது அசெட் எது, லையபிளிட்டி எது. யோசிக்காம வாழ்க்கை போற ரூட்டில போறது அசெட், இந்த மாதிரி கேள்விகளும், சிந்தனைகளும் லையபிளிட்டி என குதர்க்கமாய் படுக்காளி யோசித்தாலும் நீங்கள் அப்படி இல்லை. நீங்க ரொம்ப நல்லவுங்க.

எத்தனையோ வல்லுனர்கள் பக்கம் பக்கமாய் இதை பற்றி எழுதியிருந்தாலும். மிக எளிமையாய் ராபர்ட் கியோசாக்கி சொல்கிறார். அவரது புத்தகம் ‘ரிச் டாட் பூவர் டாட்’

எது பணத்தை உன் பாக்கெட்டில் போடுகிறதோ அது அசெட். எது உன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறதோ அது லையபிளிட்டி.

நம்மில் நிறைய பேர் நாம் குடியிருக்கும் நம் சொந்த வீட்டை அசெட் என்போம். வீட்டை அசெட் என்றால் நீ அசத்து. அவர் புத்தகம் கல கல வென சிரிக்கிறது நம்மை பார்த்து.

அவர் விளக்கத்தில் அது லையபிளிட்டி.

வருடா வருடம் சொத்து வரி, பெயிண்ட் அடிக்கணும், கரெண்ட் பில், இப்படி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்குமே அல்லாது எப்போவாவது பணம் போட்டுருக்கா. அந்த வீட்டை விற்கும் வரை. பின்ன என்ன அது சொத்துதான் என நீங்கள் வரிஞ்சு கட்டி வாதாட வந்தால், கொஞ்சம் பொறுமை. அதன் அசல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அது தரும் ரிட்டேர்ன்ஸ் பற்றிதான் பேசுகிறோம்.

(அசலையும் வட்டியையும் குழப்பாதே – இதுவும் அவரது சூப்பர் பாயிண்டு. அதை பற்றியும் சொல்கிறேன். அது வரை பொறுமை வேண்டுகிறேன்).
அவர் சொல்லும் மிக அடிப்ப்டை விசயம் இதுதான். சொத்தை பெருக்கு. கடனை குறை. அவ்வளவுதான்.

ஒரு பேப்பர் பேனா எடுப்போம். நமது செலவு ஒரு பக்கம், வரவு ஒரு பக்கம் எழுதி எது கூடுதல் எது குறைவு என பார்த்தால் நம் உண்மை நிலை பளிச்சிடும் என்கிறார்.

இது என்னை ரொம்ப யோசிக்க வைத்து வாழ்வில் சில மாறுதலும் செய்த்து.
காலம் பூரா ஜல்லியடித்து நமக்கு நிரந்தர வருமானம் தரும் ஒன்றரை அணா பிசினஸ் இல்லையே எனும் போது நே! என்றிருக்கு.
உதாரணம், ஒரு லட்ச ரூபாயில் ஒரு சோடா கடையோ, பீடா கடையோ துரந்தா கூட மாதம் ஒரு காசு லம்பா வரும். ஆனா நம்ம நிலம கைய ஊணி கரணம் போட்டு மாசமானா சம்பளத்த எதிர்பாக்கிற ஒரு ஸ்திர தன்மை தான் இருக்கு,

ரொம்ப லேட் ஆச்சோ! என்ற புலம்பலை தள்ளி விட்டு, தீவிரமா இன்னைக்கு யோசிச்சா கூட இதுக்கு ஒரு தீர்வு நிச்சயம் நாளை இருக்கு..

அழகு.... பணம்.... கடவுள்....

அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

ஆபத்தில்லாதது, சமூகம் அங்கீகரித்தது, சந்தோசம் தருவது அழகு. நிரந்தரமானதா என்பது கொண்டவரின் கோட்பாடு பொறுத்த்து.

செந்தில் (கவுண்டமணி) புகைப்படம் ஆப்பிரிக்காவில் பெண்தேட அனுப்பினால் நிச்சயம் ‘மாப்பிள்ள நச்சுன்னு இருக்கார்’ என சிலாகிக்கலாம். அதுவே வட நாட்டுக்கோ, அமெரிக்காவுக்கோ அனுப்பினால் ‘ரிஜெக்டட் தான்’

அரிசி சாக்கு மூட்டய இரண்டு பிடி பிடித்து, மேல் பிடிக்கு மீசை, தலை முடி வைத்த மாதிரி உடல் கட்டு மோகன் லாலுக்கு. சேர நாட்டின் எல்லா பெண்களின் கனவிலும் ஆதர்சன நாயகனாய் ஐம்பது வயதிலும் வலம் வருவது எந்த கணக்கில் சேர்த்தி.

‘கல்யாணம் பண்ணுற முதல் அஞ்சு வருசத்துக்கு தான் இந்த அழகு வனப்பு எல்லாம். அப்புறம் எல்லாரும் ஒண்ணு போலத்தான் என்கிற விடல பையன் கமெண்டை எங்க போய் சொல்றது.

பணம் அவசியமா?

கடலை முட்டாய் வாங்க பணம் தேவை. கிரெடிட் கார்ட் அக்ஸெப்ட் செய்வது இல்லை.

கடல் காற்று வாங்கவும், அஸ்தமனம் பார்க்கவும் காசு இல்லை.

கடவுள் உண்டா?

ஆஹா! பயங்கரமான கேள்வியாச்சே.

இது ஒயாத சர்ச்சை, தீர்வு இல்லாத கேள்வி.

எத்தனை மகான்களும் தேவ குமாரனும் வந்தால் கூட, ஒ.கே. ஒத்துக்குறோம் என ஒதுங்க முடியாத ஒன்லைனர்.

எந்த சீலமான் டாப்பையா வந்தாலும் முடிவு சொல்ல முடியாத வெட்டி மன்றம். சரி படுக்காளியும் தன் பங்குக்கு சொல்கிறேன். (ஆனா! பாஸ் எஸ்ஸே டைப் கொஸ்டினுக்கு ஒன் வேர்ட் ஆன்ஸர் பதில் சொல்ல சொன்னா எப்படி...)

கடவுள் இருக்கு என்று சொல்பவன் முட்டாள் எனும் பகுத்தறிவாளர்கள், கடவுள் இல்லை என்பவன் மூர்க்கன் என்பதை ஒப்புக் கொள்வார்களா.

ஆராயாமல் அனுபவிக்காமல் அடுத்தவன் சொன்னதை கேட்டு ஆமாஞ்சாமி போடும் ஆன்மிக வாதியை புறந்தள்ளுங்கள் என்பவரே, புஸ்தகம் படிச்சுட்டு, எல்லாம் தெரிந்ததாய் தம்பட்டம் அடிக்கும் அரை வேக்காடை அடுப்பில் போடுவோம் என்றால் கோபப் படாமல் ஒத்துக் கொள்வீர்களா.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றவர் நாம் விண்டினானும் போதே நமக்கு இறை பற்றி ஒண்ணும் தெரியாது என்கிறார். இது எப்படி.
சிறு வயதில் பெற்றோர் எனும் பாதுகாப்பில் அரவணைப்பில் வளர்ந்து, அவர் ஆதரவை எதிர் பார்க்கும் குழந்தை மனம் வளர்ந்த பின்னும் அதையே தேடி அலைவது என்பார் உளவியல் விற்பன்னர்.

இறை பற்றி விளக்க முற்படும் போதே சிக்கல் சிஞ்சினக்கா ஆடுகிறது. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்பது கவித்துவமாய் இருக்கலாம், பொருள் அளவில் வெந்தும் வேகாத ஆப்பாயில்.

குருடான நால்வர் யானை பார்த்து சொன்ன கதை தான், ஆன்மிகம் பற்றி விளக்க நாம் முற்படும் போது.

கடவுள் இருக்கு என ஒத்துக் கொண்ட இட்த்தில் கூட கோஷ்டி தகராறு. த்வைதம், அத்வைதம். ஆமா இருக்கு என்பதில் கூட, உனக்கு உள்ள இருக்கு எனும் விவேகானந்தர் கூருப், இல்லை வெளிய எனச் சொல்லும் ஆழ்வார் கூருப் இந்த பக்கம்.

இருக்கு இல்லை என்ற எந்த நம்பிக்கையோட நீ தேடினாலும் நீ மடையன் என சீறும் ஜே.கே. யும் உண்டு. மனம் போன போக்கில் தேடும் மகரிஷி மார்க்கம்.

எளிதாய், இது பற்றி விளக்க முயற்சித்தால்.

யோக நிலை என்பது மனதும், உடலும் ஒரு சேர தர்க்கம் இல்லாமல் நிற்கும் ஒரு நிலை. சொன்னதை கேட்காத மனமும் உடலும் வேலைக்கு ஆவாது. நட்பான உடலும் மனமும் ஆரம்பம். பின்னர் தியானம். தியானம் என்பது உடல், மனம், பகுத்தறியும் புத்தி எனும் மூன்றையும் அடக்கிய (மூன்றும் கண் மூடி, வாய் பொத்தி நிற்கும் பரிதாவமான) ஒரு நிலை. ஆன்மாவை தரிசிக்கும் ஒரு கட்டம்.

நான் என்பது உடல் இல்லை, மனம் இல்லை, புத்தி இல்லை. சரி பின்னே என்ன, காலம் கடந்த, பொறுப்புக்கள் கடந்த, உலகம் கடந்த ஒரு குட்டி ஒளி. ஆன்மா. நம் ஆன்மாவை கண்டபின் ஆன்மாவின் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஆன்மாவை காணுவது இறையியம். கண்டதை வெளியில் / மொழியில் சொல்வது பெரிய உட்டாலங்கடி வேலை.

டேன் பிரவுன் தனது கதை ஒன்றில் இதே கேள்விக்கு ஒரு கதாபாத்திரத்தின் சிந்தனையாய் இதை சொல்லுவார்.

‘இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொண்டால் கூட அதை புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். மேலும் அதை என் வாழ் நாளில் தெரிந்து கொள்வது மிகவும் சிரமம் போல தோன்றுகிறது’

நானும் ததாஸ்து.

காதல்

காதல் மனிதனுக்கு அவசியமா?

இல்லையா பின்ன, அப்புறம் நான் எப்படி குப்புற படுத்து கவிதை எழுதுவது. விட்டத்த பார்த்து கனா காண்பது,லவுசு மூடுல உலகத்தயே மறந்து அலைந்து திரிவது.

ஒன் மினிட், கேள்விய சரியா வாசிக்கட்டும்.

ம்.... காதல் !!!! ????

காதல் பற்றிய விளக்கம் தான் எனை குழப்புகிறது. அதீதமான பிரியம் காதல் எனலாமா.

கல்மிஷம் இல்லாமல் யாருக்கு விட்டுக் கொடுக்க முடியுதோ அங்கு காதல் இருக்கிறது என்று எழுத்துச் சித்தர் பாலா சொல்லுவார். ரசாயண சேட்டை, எக்ஸ்ட்ரோஜன்களின் எழுச்சி என்பார் சுஜாதா.

காதல் மனிதருக்கு இடையில் உறவாடலில் உள்ளதா, அன்றின் மனித மனதில் உள்ளதா.

காதல் என்பது பெரும்பாலாக நம் வாழ்க்கை வழக்கில்/ விளக்கத்தில் திருமணத்துக்கு முன் ஆண் பெண்ணுக்கும் இடையில் பூப்பதையே குறிப்பிடுகிறோம்.

இல்லாமல் கல்யாணத்துக்கு பின் மனைவியோடு காதல், தொழில் காதல், இலக்கு/ இலட்சிய காதல் என சேர்த்துக் கொண்டால். அப்பு அது தப்பு என்றோ ஆஹா அது உப்பு அதை சப்பு என்றெல்லாம் எழுதி விடலாம்.

எக்கச்சக்க காதல் இருப்பதாலும், காதல் அவசியமா என்ற கேள்வியிலே, பதில்கள் இரண்டு சாய்ஸாய் இருப்பது தான் குழப்பத்தின் காரணகர்த்தா.

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு

எண்ணம் சொல்லாகும்
சொல் செயலாகும்
செயல் பழக்கமாகும்
பழக்கம் குணாதிசயமாகும்
குணாதிசயம் நீயாவாய்

- (ஜெய் குருதேவ் பூஜ்ய ஷ்ரீ ஷ்ரீ ரவி சங்கர்)

எண்ணங்கள் சில நம் வாழ்வின் பாதையையே மாற்றி அமைக்கும் வல்லமை உள்ளது.

அத்தகைய ஒரிறு சிந்தனைகள் என் வாழ்வையும் புரட்டிப் போட்டது.

மூலம் நம் தமிழுக்கு அன்னியமானாலும், விளைவு நம் மனித வாழ்வு என்பதால் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சிந்தனை 1 :
ராஜா என்றோரு பெயரை வைத்துக் கொள்வோமே. பள்ளி/ கல்லூரி நாட்களில் அவன் உங்கள் பரம எதிரி. அவனுக்கும் தங்களுக்கும் ஏழாம் பொருத்தம். அவனை பார்த்தாலே எரிச்சல் வரும், அப்படி ஒரு பிரகஸ்பதியை பள்ளி/ கல்லூரி முடிந்த பிறகு நீங்கள் பார்க்கவே இல்லை. வருடம் ஒரு பத்தை உருட்டி விட்டது என்றும் வைத்துக் கொள்ளலாமே.

நல்ல வேலை, குடும்பம் என நீங்கள் செட்டிலாகி விட்டீர்கள். பழைய நினைவு என்பது இப்போதும் இனிமையாகவே உணர்கிறீர்கள்.

இன்று தற்செயலாய் ரோட்டில் அவனை நீங்கள் பார்க்கிறீர்கள்.

முதலில் ஒரு சந்தேகம். அவனா இது. அவன் தானே. அதே ஒடிசல் தேகம், இன்னும் கருத்து இருக்கிறான். அவன் தான். சந்தேகம் இல்லை. இப்போ என்ன செய்ய. பகைமை அப்போது தானே, இன்னுமா. பேசலாமா, இல்லை வேண்டாமா என மனதில் ஒரு தர்க்கம். புன்னகைக்கலாமா, இல்லை அவன் என்ன செய்வான். சரி இருக்கட்டும் அவன் என்ன செய்கிறான் என பார்ப்போம். தீர்மானம் இல்லாமல் ஒவ்வொரு தப்படியாய் நடந்து செல்கீறிர்கள்.

நெருங்கி விட்டீர்கள்.

எதிர்பாராத்து நடக்கிறது. அவன் பாய்ந்து உங்கள் சட்டையை பிடித்து கன்னத்தில் சப்பென்று அடிக்கிறான்.

அவ்வளவு தான் உங்களுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வர, திருப்பி தாக்க கை முஷ்டி மடக்குகீறீர்கள். அப்போது அவன் கூட நடந்து வந்த சிலர் அவனை அமுக்கிப் பிடிக்க, ஒருவர் உங்கள் அருகில் வந்து உங்கள் கை பிடிக்க, சாலை விழி மேல் வைத்து பார்க்கிறது.

’சாரி சார், இவருக்கு மன நிலை சரி இல்லை. ஆஸ்பத்திரிக்கு தான் கூட்டிக்கிட்டு போறோம். தப்பு நடந்திருச்சு, மன்னிச்சுருங்க’

நண்பர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்.

சட்டென்று கை உதறி, பரிதாவமாய் அவனை பார்ப்பீர்கள் அல்லவா. எதாவது உதவி செய்ய முடியுமா என அவசரமாய் சிந்திப்பீர்கள் அல்லவா,

ஒரு கேள்வி.

அது எப்படி. ஒரு தகவலில் உங்கள் சிந்தனை அதன் தொடர்புடைய செய்கை மாறி விட்ட்து.

கோபம், ரவுத்திரம் என பொங்கியது ஒரு பத்து வார்த்தைகளில் இரக்கம், பச்சாதாபம் ஆக மாறி விட்டது.

இப்போதும் அவன் உங்களை அடிக்க திமிறிக் கொண்டு இருந்தாலும், உங்கள் பார்வை கனிவாகத்தானே உள்ளது.

இது என்ன விந்தை.

ஸ்டிபன் ஆர். காவி தனது புத்தகத்தில் இதையே ’பாரடைம்’ / ‘பாரடைம் ஷிப்ட்’ எனக் குறிப்பிடுகிறார்.

நமது பார்வையில் அல்ல உணர்வில் தான் எதுவுமே விளக்கப் படுகிறது. எந்த செய்கையும் அதை குறித்த நமது விளக்கமே நிர்மாணிக்கிறது.

சரி, ஒத்துக் கொள்கிறேன். இது என் வாழ்வை மாற்றி அமைக்குமா. கும்...

1. இனி சாலையில் அவசரமாய் செல்லும் போது நம்மை இடிப்பது போல சென்ற அந்த நபரை பார்த்து தூசன (கெட்ட) வார்த்தையால் வைய வேண்டாம். ஒரு நிமிடம் ஏன் இப்படி செல்கிறான். என்ன பிரச்சனை. சரி, எதோ பிரச்சை. இந்த சிந்தனை போதுமானது. நிச்சயமாய் அடுத்த்தாய் இப்படித்தான் நினைப்போம். என்ன அவசரமோ போகட்டும் என விட்டு விடலாம்.

அட போடா. தோத்து கொடுக்க சொல்றீயா! உப்பு சப்பு இல்லாம வாழ சொல்றீயா, என்ற நினைப்புக்கு இல்லை இந்த கோபமும் கெட்ட வார்த்தையும் நமது உடலையும் மனதையும் தானே சீரழிக்கும்.
ஒரு தகவல் நம் சிந்தனையை மாற்றும் வல்லமை பெற்றது என புரிந்தாலே மிகப் பெரிய மாறுதல் நமக்குள் நிகழும்.

வெறும் பதிவாய் இல்லாமல், அவசர அவசரமாய் வாசித்து முடித்து விட்டு விடாமல், ஒரு நிமிடம் இதை பற்றி யோசித்தால் இன்னும் பிரமாண்டமான விடயம் தங்களுக்கு தோன்றும். சிரம்ம் இல்லை என்றால் அதையும் பின்னூட்டமிடுங்கள்.

அடுத்த இது போன்ற ஒரு தகவலுடன் நான் விரைவில் வருகிறேன்.

தாத்தாவ மறந்திட்டியே கண்ணு....

1
கும்மிருட்டு. குடிகார குடிமகன்கள் கூடி கும்மியடிக்கும் குஜாலான பார். கூட்டம் அள்ளுது. அதோ அந்த டேபிள்ல, அதேதான் லாஸ்ட்ல இருந்து இரண்டாவது. அங்கதான் போதையில் தாறுமாறாய் நம் செல்லத்தம்பி.
சரி போதும். நிறுத்திர வேண்டியது தான் இதே லெவல்ல கிளம்பினாத்தான் வீடு சேர முடியும் இல்லை, பாதி வழியில எங்காவது ரோட்டில தான் படுக்க வேண்டி இருக்கும் என தோணியதால் இடுப்பு பேண்ட் இழுத்து விட்டு கிளப்பத் தயாரான போது, அடுத்த டேபிள் ஆளு, சொன்னதால் அவசர அவசரமாய் போய் அடுத்து ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டார்.
ஏன்.....

2
எவ்வளவு தரம் கழுவினாலும் இந்த சிங்க்ல போடுற பாத்திரம் ஒழியுரதில்ல. நைட்டுல வேலையெல்லாம் முடிஞ்சு அக்கடான்னு படுக்கலாம் என்கிற போது தான் ஒரு வண்டி பாத்திரம் இருப்பது தெரிகிறது. இப்பவாவது பரவாயில்ல காலையில பாத்துக்கலாம்னு விட்டா அவ்வளவுதான் காலை பரபரப்பில் இது ரொம்ப ரொம்ப கஷ்டம்.

கை என்னவோ எச்சில் பாத்திரத்தோடுதான் என்றாலும் எண்ணம் மட்டும் நாளை திட்டமிடலில். (உபயம்: வைரமுத்துவின் வீரிய வைர கவிதைகள்) பிள்ளைகளுக்கும் அவருக்கும் லீவு, மட்டன் எடுத்து லீவர் பிரை பண்ணிர வேண்டியது தான். நினைத்த்தை சொல்ல்லாம் என உரக்க கணவனை அழைத்து விட்டு சட்டென உரைக்க நாக்கு கடித்துக் கொண்டு, தலை ஆட்டி சிரித்தாள்.

ஏன்.....

இன்று காந்தி ஜெயந்தி

அவரோடு வாழ்ந்த காலத்தில் இறு வேறு ஆட்கள்.
புத்தன் யேசு காந்தி என நம் மூத்தவர் சிலர் சிலாகித்து சொன்னார்கள். லிஸ்டில் இருந்து காந்திய எடு! அவர் என்ன தேவ குமாரனா என்றும் இரு வேறு கூறுகளாய் தர்க்கம் செய்தனர். அது அன்று.

இன்று,
அடைத்த கடைகளில் மாத்திரம்!!!
அன்றைக்கு மட்டும் திருட்டுத்தனமாய் நாம் செய்யும் சேட்டையிலுமே!!!
அஹிம்சை பல் இளிக்கிறது. திவிரவாதம் திமிறிக்கொண்டி இருக்கும் இந்த வேளையில் காந்தி இருந்தால் என்ன செய்வார் என்று திரைப்படம் எடுத்து நம் கல்லாவை நிரப்பிக் கொள்கிறோம். அம்புட்டுதேன்.

மறக்காமல் இன்றும் அரசு அலுவலகங்களில், அவர் போட்டாவாய் தொங்குகிறார். காந்திய பாரு, அவர் சொன்னத கேளுன்னு பதிவர் நாமெல்லாம் கூட சொல்வதே அன்றி செயல் படுத்தினோமா எனும் கேள்வி மண்டய பிராண்டுது.

அவரது அரசியல் அல்லது சுதந்திர போராட்டம் அன்றைய காலக் கட்டாயம். அதை உங்கள் அனுமதியோடு தள்ளி வைப்போம். கதராடை, அஹிம்சை, ஒத்துழையாமை இதெல்லாம் அது கூடவே சென்று விடும்.
மிஞ்சி நிற்பது அடிப்படை காந்தீயம்.
அச்சம் இன்மை,
அடி வாங்கும் வலு இருந்தால் திருப்பி தாக்கும் திறன் தேவை இல்லை
ஒளிவு மறைவின்றி உள்ளத சொல்லு
உனக்கு சரி யெனப் பட்டால், சட்டய தூக்கி வீசு, அடுத்தவனுக்காக பீட்டர் இங்கிலாண்டு போடாத
கடல தூண்ணு, ஆட்டுப் பால் குடி, உடம்ப உரமாக்கு
மனிசனுக்குள்ள ஏற்ற தாழ்வு இல்ல,
கடவுள் கால புடி, கட்டிக்கா புடி, விட்டுரவே விட்டுராத
நல்லா படி, அறிவுதான் மெயின் மற்றதெல்லாம் கொய்ங்

சேது விநாயகம் செத்துட்டான்யா

நண்பர் காலையில் தொலைபேசியில் சொன்ன வார்த்தை இது.

மனம் சட்டென்று தேடி இனம் கண்டு கொண்ட்து. அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நீங்கள் தமிழ் திரைப்படம் ஆழமாய் பார்ப்பவராய் இருந்தால், இவரை தெரிந்திருக்கும். ஒரு வேளை பெயர் தெரியாமல் இருந்தாலும் கூட ஆளை நிச்சயம் தெரிந்து இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்சா திரைப்பட்த்தில் மிக பிரபலமாய் பேசப்பட்ட மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் காட்சியில் கல்லூரியின் தாளாளர் வேடத்தில் நடித்தவர். வசனமே இல்லாத இந்த காட்சியில் ரஜினியின் கட்டளை போன்ற உடல் அசைவிலே காட்சியின் பொருள் விளக்கப்பட்டிருந்தாலும் சேதுவின் தேர்ந்த உடல் அசைவில் அவர் காண்பித்த உணர்ச்சியில் நல்ல அனுபவம் தெரியும். பயந்து, வேர்வையை துடைத்துக் கொண்டு, பவ்யமாய் எழுந்து நிற்கும் நடிப்பிலுமே அந்த காட்சி நிறைவு பெற்றது என்றால் மிகை ஆகாது.

சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நடிப்பும், திரைப் படமுமே தனது வாழ்வு என்று கொண்டிருந்திருக்க வேண்டும். அவரது மறைவு கேட்ட்தும் சில சிந்தனைகள்.

கதாநாயகனாகும் அல்லது பிரபலம் ஆகும் எண்ணமும், ஆவலும் நிச்சயம் அவரிட்த்தில் இருந்திருக்க வேண்டும். ஆவல் நிச்சயம் முயற்சி செய்ய தூண்டி இருக்கும். முயற்சி சில தோல்விகளை சந்தித்து இருக்க கூடும். நினைத்தது நடக்கும் முன்னே, அல்லது அது நிறைவேறும் முன்னரே மரணம் முந்தி கொண்டது.

வெற்றி பெறும் ஒரு மனிதன் / நாயகன் பின் தான் பொருளும், புகழும் ஏன் இலக்கியமுமே நடை பழகுகிறது. தோற்றவன் பின் யார் இருக்கிறார்கள்.
ஒருவன்!!! பல்லக்கில் ஏரி பவனி வர குறைந்த பட்சம் நால்வர் தங்கள் முகம் தொலைத்து சாதாரணன் ஆக வேண்டி உள்ள நம் சமூக கோட்பாடு புதிராய் உள்ளதே.

பல கோடி தொண்டன்களும் ஒரு தலைவனாகவும் உள்ள அமைப்பு மாறி, எல்லாரும் தலைவராக முடியுமா.

பிறக்கும் அத்தனை மனிதனும் தனது லட்சிய இலக்கு அடைய முடியுமா.

ஒரு சில பேர் மாத்திரம் இலக்கை அடையும் ரகசியம் தான் என்ன.

காமெடி – பொறுப்பில்லாத கோணங்கித்தனம்

ஒளி விளக்கு திரைப்பட்த்தில் ஒரே நேரத்தில் ஐந்து எம்.ஜி.ஆர் வந்து ஆடிப் பாடும் ஒரு அசத்தல் தத்துவ பாடல்.

ஒரு எம்.ஜி.ஆர். திரையில் வந்தாலே தாங்காத நம் ரசிகன், செய்வதறியாது திகைத்த தருணம்.

‘தைரியமாக சொல் நீ மனிதன் தானா!
இல்லை நீதான் ஒரு மிருகம்”

பாடல் சிச்சுவேசன், நிறைய பேருக்குத் தெரியும், தெரியாதவருக்கு. இது டாஸ்மாக் மேட்டர். குடிக்கு அடிமையானவனை அவனது மனசாட்சி அதன் பாதகங்களை சொல்லுவதாய் அமைந்த பாடல்.

சிக்கென்று பளிர் உடையில், துறு துறு வென நடிப்பில், நறுவிசான நாகரிக உடல் அசைவில் (பாடி லேங்குவேஜ்- சூப்பர்) தூள் கிளப்பும் காட்சி அமைப்பு. ஆழ்ந்த அர்த்தம், எளிமை வார்த்தைகள், இனிய துள்ளலான இசை, திரையில் தூள் பரத்தும் காட்சி அமைப்பு என்று எல்லாம் நல்லதாய் அமைந்த பாடல். என் பேவரிட் என்றும் சொல்ல்லாம்.

அழுது வடிந்து கொண்டுதான் தத்துவம் சொல்லணும்னு இல்லை என புது டிரெண்ட் செட்டர்.

சரி இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். தலைப்பு பயங்கர கோபத்தில எழுதின மாதிரி இருக்கே என நினைப்பருக்கு, இதனுடன் தொடர்புடைய இன்னொரு நிகழ்வு இதோ.

ஒரு நகைச்சுவை மேடை நாடகத்தில், கதா நாயகனுக்கு வால் முளைத்து விடுவதாய் கதை. தனிமையில் புலம்பிக் கொண்டி இருக்கும் அவன் சென்று ரேடியோ ஆன் செய்கிறான். பாடல் ஒலிக்கிறது.

‘தைரியமாக சொல் நீ மனிதன் தானா!
இல்லை.....
(இல்லையா!!! என அதிர்ச்சியில் டிராமா நாயகன் கவுண்டர் வசனம் தர.... அரங்கமே சிரிப்பில் அதிருகிறது)

நீதான் ஒரு மிருகம்”
சரியாக இந்த இடத்தில் ஒட்டை விழுந்த ரெக்கார்ட், இந்த ஒரு பத்த்தையே திரும்ப திரும்ப சொல்ல சலிப்போடு ரேடியோ ஆப் செய்கிறான்.

நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்து ரொம்ப காலம் ஆனது. மீண்டுமொறு நேரத்தில் ஒளிவிளக்கு பாடல் மறுபடி ஒலிக்க, எனக்கு ஆச்சர்யம். பாடல் வரி காதில் விழுந்து மனதில் எம்.ஜி.ஆருக்கு பதில் காமெடி கிங். தத்துவம் போயி காமெடி.

இது என்ன கலாட்டா. இத்தனை வருடங்களாய் ஆக்கிரமித்து இருந்த ரெபரன்ஸ் பாயிண்ட், மாறி விட்ட்தே. என்னைப் போல் ரசிகனுக்கும் இதே உணர்வு வருமே என்றவுடன் சட சட வென சில கேள்விகள்.

நமக்கு சொந்தம் இல்லாத அடுத்தவர் கற்பனையை அல்லது சிந்தனையை அவரின் அனுமதி இல்லாம, நாம் எடுத்துக் கொண்டு, முன்னவர் சொன்னதை அர்த்தம் திரித்து, அவரது நோக்கம் சிதிலமடைந்தால் நாம் அவருக்கு செய்யும் துரோகம் ஆகுமோ...

நிச்சயமாய் எந்த உள் நோக்கமும் இல்லாமல், சும்மா காமெடி தான் பண்ணியிருக்கிறார் என புரிகிறது. சும்மா.... காமெடிக்கு தான பாஸ், என்றாலும், சிரிப்பு வரும் என்பதால் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா.
காமெடி செய்யும் போது கவனமாய் இருக்க வேண்டுமோ.

மனதை லேசாக்கும் சிரிப்பு அவசியம் ஆனாலும், வலுக்கட்டாயமாய் தினிக்கும் நகைச்சுவை வன்முறையோ.

நாட்டுக்கு தேவை நல்ல சிந்தனையா, சிரிக்க வைக்கும் காமெடியா..

கலைஞர்களுக்கு சமூக மாற்றும் சக்தி இருப்பதால், நமது ஒவ்வொரு நடையும் கவனமாய் இருக்க வேண்டுமோ.

கலைஞர்களுக்கு சமூக பிரங்ஞை மிக மிக அவசியமோ...