நண்பர் காலையில் தொலைபேசியில் சொன்ன வார்த்தை இது.
மனம் சட்டென்று தேடி இனம் கண்டு கொண்ட்து. அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
நீங்கள் தமிழ் திரைப்படம் ஆழமாய் பார்ப்பவராய் இருந்தால், இவரை தெரிந்திருக்கும். ஒரு வேளை பெயர் தெரியாமல் இருந்தாலும் கூட ஆளை நிச்சயம் தெரிந்து இருக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்சா திரைப்பட்த்தில் மிக பிரபலமாய் பேசப்பட்ட மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் காட்சியில் கல்லூரியின் தாளாளர் வேடத்தில் நடித்தவர். வசனமே இல்லாத இந்த காட்சியில் ரஜினியின் கட்டளை போன்ற உடல் அசைவிலே காட்சியின் பொருள் விளக்கப்பட்டிருந்தாலும் சேதுவின் தேர்ந்த உடல் அசைவில் அவர் காண்பித்த உணர்ச்சியில் நல்ல அனுபவம் தெரியும். பயந்து, வேர்வையை துடைத்துக் கொண்டு, பவ்யமாய் எழுந்து நிற்கும் நடிப்பிலுமே அந்த காட்சி நிறைவு பெற்றது என்றால் மிகை ஆகாது.
சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நடிப்பும், திரைப் படமுமே தனது வாழ்வு என்று கொண்டிருந்திருக்க வேண்டும். அவரது மறைவு கேட்ட்தும் சில சிந்தனைகள்.
கதாநாயகனாகும் அல்லது பிரபலம் ஆகும் எண்ணமும், ஆவலும் நிச்சயம் அவரிட்த்தில் இருந்திருக்க வேண்டும். ஆவல் நிச்சயம் முயற்சி செய்ய தூண்டி இருக்கும். முயற்சி சில தோல்விகளை சந்தித்து இருக்க கூடும். நினைத்தது நடக்கும் முன்னே, அல்லது அது நிறைவேறும் முன்னரே மரணம் முந்தி கொண்டது.
வெற்றி பெறும் ஒரு மனிதன் / நாயகன் பின் தான் பொருளும், புகழும் ஏன் இலக்கியமுமே நடை பழகுகிறது. தோற்றவன் பின் யார் இருக்கிறார்கள்.
ஒருவன்!!! பல்லக்கில் ஏரி பவனி வர குறைந்த பட்சம் நால்வர் தங்கள் முகம் தொலைத்து சாதாரணன் ஆக வேண்டி உள்ள நம் சமூக கோட்பாடு புதிராய் உள்ளதே.
பல கோடி தொண்டன்களும் ஒரு தலைவனாகவும் உள்ள அமைப்பு மாறி, எல்லாரும் தலைவராக முடியுமா.
பிறக்கும் அத்தனை மனிதனும் தனது லட்சிய இலக்கு அடைய முடியுமா.
ஒரு சில பேர் மாத்திரம் இலக்கை அடையும் ரகசியம் தான் என்ன.
வலையுலகில் யாரும் இது / இவரின் மறைவு பற்றி பதிவு போடாத நிலையில்(என்னையும் சேர்த்து தான்...) நீங்கள் அன்னாரை நினைவு கூர்ந்தது பாராட்டத்தக்கது...
பதிலளிநீக்குசேது வினாயகம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்... அவரின் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
சூப்பர் ஸ்டார் ரஜினியின் "பாட்சா" படத்தில் அவரின் கதாபாத்திரம் மிக சிறிதாக இருந்தாலும், தலைவர் ரஜினியுடன் சேர்ந்ததால் மிக பிரபலம் அடைந்தது...
வாங்க கோபி. ரொம்ப தேங்ஸ்.
பதிலளிநீக்குஇலக்கியம் கூட ஜெயிச்சவன் பின்னால போகுதுன்னு நான் வருத்தப்பட்டேன். வலையுலகமும் அப்படித்தேன்... நீங்க வருந்தினது பிடிச்சிது.
சரியாக சொன்னீர்கள், ரஜினியுடன் இனைந்த்தால் அந்த பாட்ஷா படா பிரபலம் ஆச்சு. இன்னும் நிறைய சேதுக்கள் திரை சேத்துக்குள் ஒளிந்திருக்கிறார்களே, என லேசான ஆதங்கம் மண்டைய பிராண்டுது
உளியின் பெருமை நம்மை போன்றவர்களுக்குத்தான் தெரியும்...சிற்பம் ரஜினிய பற்றி எல்லோறோம் பேசுவார்கள்... யாரும் உளியயூ... செருப்புபற்ற்யோ பேச முன் வர மாட்டர்கள் ........ என்ன செயும் யாருக்கும் தெரியாமல் வாழும்... உளிய பட்டியும் நெனைக்கும் உங்க நல்ல மனசை என் நண்பனை வாழ்த்தி.....வணங்குகிறேன்... நன்றி...
பதிலளிநீக்குஉங்கள் மனித நேயத்ரிக்கு ஒரு வந்தனம்...
செல்லத்துரை
நண்பர் சிதுரை கமெண்ட் நல்லா இருக்கு...
பதிலளிநீக்குஆனால், எல்லோருக்கும் புரியற மாதிரி எழுதினா இன்னும் நல்லா இருக்கும்...
இதை படித்துவிட்டு அவர் கோபப்பட வேண்டாம் என்று எங்கள் சங்கத்தின் (டகால்டி டயலாக்ஸ் சங்கம்) சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்...
சிதுரை ஃப்ரீயா இருந்தார்னா, இந்த வாரம் நம்ம சங்கம் கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றலாம்...
நிறைய இடத்தில் உளி, சிலை, சிற்பி என்று எழுதி இருக்கிறார்..
அப்படியென்றால் "தல"யின் கழக "உடன்பிறப்பா"?? இல்லை என்றால் "உளியின் ஓசை"க்கு ரசிகரா??
உங்கள் பதிவு பார்த்து தான் அவர் இறந்தது அறிந்தேன். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஅஞ்சலி செலுத்தும்
எந்த அறிவிப்பும்
சொல்லுவதில்லை
எப்படி இறந்தார் என்ற
செய்தியை.
மோகன் குமார்