பக்கங்கள்

சிறுகதை - எதிரொலிகள்....

எனக்கு கவிதைகள் மேல் ஒரு சிறு கோபம் உண்டு்…..

கவிதையின் குணங்கள் அப்படி. அதன் இயல்பு அப்படி. ஒரே நேரத்தில் ஒரு மனிதனை கவிழ்த்து போடும் வலு அதற்கு உண்டு…. ஒரு வரியில், ஒரு மொந்தை கள்ளை அளி(ழி)(விழ்)த்து, மேகத்தில் அலைய விடும் வினயமும் உண்டு, சுடு நீராய் கண்ணீரை பிரசவித்து, ரத்தம் சுண்ட நரம்புகள் புடைக்க உணர்வை தூண்டும் தூண்டிலும் உண்டு…

கவிதை மேலுள்ள கோபத்தில் கவிதையை திட்டி கவிதை எழுதினேன்….

கவிதை கண் ராவி 

கவிதை கண்ணாடிகள் போல.......     முன் வந்து நிற்கும் உருவம் காட்டும் முகமூடி.......

மொட்டை வார்த்தைகளை   மொட்டாய் பூக்கும் பூச்செடி

நம்மில் இருந்து அர்த்தத்தை களவாடும்,    அற்புத விளக்கு பூதம்........

ஓஹோ… கவிதைகளில் இப்படி ஒரு அவஸ்தை இருக்கிறதோ….. ஒவ்வொரு வாசகருக்கும்... கவிதைகள் பிரதிபலிக்கும் அர்த்தம் வேறு வேறாய் இருக்கிறதோ… ஆங்… கட்டுரைகள் செல்லக் குட்டிகள்: என்ன ஆசிரியர் சொல்கிறாரோ, அதை அப்படியே பிரதிபலிக்கும் என நான் கருதியதுண்டு.

கதைகளை கட்டுரையின் குடும்பம் (சேம் ஃபேமிலி) என நினைத்திருந்தேன்… அவை வேற்று சாதி என்பது எனக்கு நேற்று புரிந்தது….!!!! கதைகள் கூட பூனை போல், புனைவுகளை பிரசவிக்கும் என இப்போது தெரிந்து கொண்டேன்….

சமீபத்தில் எழுதிய தனிமை கதை எதை பற்றி பேசுகிறது என இரு கருத்துக்கள் சொல்லப்பட்டன, ஆனால் அவைகள் நான் நினைத்தவை அல்ல…. !!!! இந்த தனிமை கதையின் ஒற்றை வரி என்னவோ என கேட்ட போது, இரு கருத்துக்கள் வந்தன…

1.   இக்கரைக்கு அக்கரை பச்சை… இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பது என ஒற்றை வரி தாக்கமாக ஒருவர் சொல்ல
2.   சம்சாரத்துக்கும், சாமியாருக்கும் நடக்கும் போராட்டத்தில், சம்சாரம் வெல்வதாக இன்னொரு தாக்கமும் சொல்லப்பட …..

நான் கொஞ்சம் திகைத்தேன்… மேற்கூரிய இரண்டுமே மிக நல்ல கருத்துக்கள், ஆம், இக்கதையின் கொள்வுகளாக கொள்ளக்கூடியது என்றாலும் நான் சொல்ல வந்ததை, தெளிவாக சொல்லி விடலாமே என அமர்ந்தேன்… 

நான் சொல்ல விளைந்தது…….. Breathing space பற்றி………….

இது ஒரு நுண்ணிய விஷயம். இதை புரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும் மிகுந்த அவசியம் இருக்கிறது… அதிலும் குறிப்பாய் உறவுகளிடத்தில் உரசல்கள் ஏற்பட முக்கிய காரணி இந்த Breathing space தான்.

நீ என் பொண்டாட்டி தான, அப்ப உனக்கு வர்ற மெயில் பூராத்தையும் எனக்கு காட்டு என்பது, வன்முறை. என் புருசன் தான நீ, அப்ப வீட்டுக்கு வந்ததில இருந்து, என்னை சுரண்டிகிட்டே இரு, என மூக்குக்குள் விரல் விட்டு ஆட்டினாலும் வன்முறை.

அன்பு அமைதியானது, ஆர்ப்பாட்டம் இல்லாதது, ஆக்கபூர்வமானது….. அது அடுத்தவரை உரிமைப் படுத்த நினைக்காது… ஒரு மௌனம், ஒரு பேசாத வார்த்தை இவைகள் தான் அன்பின் அடித்தளம்.

எனக்காக நீ அழலாம், இயற்கையில் நடக்கும், ஆனால் எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் …………

உறவில் வெகு ஜன பிரச்சனையே இதுதான்… ஏன் எங்கிட்ட சொல்லல, ஏன் எங்கிட்ட மறைச்ச என நம் எதிர்பார்ப்புக்கள் அத்துமீறலையே பிரசவிக்கின்றன. அன்பை பிரதிபலிப்பதில்லை. சொன்னத கேட்டுட்டு, ஜடமாய் இருப்பது அல்ல உறவு.

ஆனால் நம்மில் பலர், காஸ்ட்ட்லி எல்.சி.டி. மாதிரி காட்டிக் கொள்ள ஒரு பொம்பள, எனும் ரீதியில் தான் பெண்டாட்டியை நடத்துகிறது.

இக்கதையில் வரும் நாயகன் நாதன், மூச்சு விட….!!!! நேரமில்லாமல் உழைக்கிறான். தன்னுள் ஆழ சென்று, தன் சுய விருப்பு வெருப்புக்களை அவதானிக்க முடியாமல் தவிக்கிறான். அதனாலேயே அதில் அன்னியத்தை உணர்கிறான். அந்த அழுத்தத்தில் தன் அடிப்படையை உரசுகிறான்.

ஆத்து மீனில் கூட, அவன் ஆம்படையாளை நினைக்கிறான். கவிதை எழுதுவதை விரும்புகிறான். நயம் இட்லி சாம்பாரை விரும்புகிறான். அவன் தன் மனித இயல்பாய் இருக்கிறான்….. அல்லது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான், அந்த நாதனை ஒரு மாதம் ஃபண்ட் மார்க்கெட் பக்கம் போகாமல் இருக்க சொல்லி, தாமிரபரணியில் மீன் பிடிக்க சொன்னால்…. துள்ளி எழுந்து ஓடி விடுவான்….

அப்படியென்றால் அவன் தேவை என்ன… அவன் விரும்புவது எதை… தனிமையை… தன்னுள் சென்று தனக்கு இதமானது எது.. தான் விரும்புவது எது என கேட்பதை… அபாயகரமாக, அவனுக்கு இந்த சமூகம் அதை தரவில்லை.. அதனாலேயே ஓடி ஓடி எதையோ தேடுகிறான்… அவனுக்கு தேவையானது அவனது வீட்டிலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது… என்ன ஒரு அசௌகரியம்… அது அவனுக்கு கைக்கு அருகில் இருந்தும், சுயம் விளக்கம் கிடைக்காததால், அர்த்தம் கிடைக்கவில்லை… என அலைகிறான்.

உறவுகள் தான் நம்மை உலவ வைப்பது, உழல வைப்பது. தன்னைப் போல, உறவில் தெளிவு கொண்டு, துணை தேடும் அந்த திரு நெல்வேலி அண்ணாச்சியில் தெளிவு பெறுகிறான் என கதை அமைத்தேன்... 

மனித இயல்பு என்றும் மாறுவதில்லை…

ஹா…ஹா…. உண்மை இதுதான்…. கூடி வாழும் இயல்பினனே மனிதன்……….. எக்காரணத்தை சொல்லியும், தனிமை தேடுபவன் மிருகமே……….. நிரந்தர தனிமை தேடுபவன் மிருகமே... அது என்லைட்மெண்டே ஆனாலும் கூட……………..!!!!!  போ.. தனியாக போய், தனக்குள் இரு... பின்னர் வா என்பதே மனித வாழ்க்கை என்பது என் ஸ்கூல் ஆப் தாட்...

சுய தேடல் மறுதலிக்கப்படும் போது, மதம் கொள்ளும் மடமை நம்முள் இருக்கிறது…. அது தவறான சில தாக்கிதுகளை சொல்கிறது.

சரி…… இப்போதாவாவது நான் சொல்ல நினைத்ததை சொன்னேனா… அல்லது… குட்டையை இன்னும் குழப்பி விட்டேனா….

யப்பா….. முடியல… இப்பவே கண்ண கட்டுதே………………………….. குட்டை குளப்பி குட்டையை குளப்பி........ மீன் கண்டு பிடித்து...... சரியாக மீன் பிடிக்கும் போது, அது கை நழுவி செல்வதை சொன்ன கதையே கீழ்க்காணும் சல்ஃபா கதை...

நம் ஆளுமையை தீர்மானிக்கும் கருத்துக்கள்..... நம்முள் கருதுகளாகத்தான் நுழைகின்றன.... இந்த கருதுகள் எந்த சூழலிலும், எந்த காலகட்டத்திலும் தலை குப்புற வீழும் சாத்தியங்கள் இருப்பதால்... நாம் மாறத்தயாராய் இருக்கிறோமா.... மாற்றத்தை உடுத்தி கொள்ள ரெடியா என்பதே சல்ஃபா...


3 கருத்துகள்:

  1. ji...

    யப்பா….. முடியல… இப்பவே கண்ண கட்டுதே…

    cdhurai

    பதிலளிநீக்கு
  2. வெளியில கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெயிலில சுத்திட்டு வந்து முகநுலை ஓப்பன் பண்ணி இந்தக்கதையை படிச்சா, கிறுகிறுத்துப் போச்சு மண்டை....

    தனிமை தேடுபவன் மிருகம்னு எழுதிப்புட்டு தனியாப் போய் தனக்குள் இருன்னா................

    இயேசு கூட தன் சிலுவையில மரிக்கிறதுக்கு முன்னாடி எல்லாரையும் விட்டு தனியாத்தான் போனாரு.... அது தன்னோட வேதனையை தனிக்கிறதுக்கு ஏற்படுத்திக்கிட்ட குளுகோஸ்னு நான் நெனச்சேன்.....

    ஆக மொத்தம் நான் தனியா இருக்கனுமா இல்ல தனிச்சு இருக்கணும்மா,,,,?

    பதிலளிநீக்கு
  3. ஹா...ஹா....

    சாரி....... Vas Charles..........,கோவை இப்ப சென்னையை விட சூடா இருக்குன்னு வாசிச்சேன்... அந்த சூட்டுல இப்படி ஒரு வேதனைய நானும் கொடுத்துட்டேனா........ஹா..ஹா...

    இனி தங்களின் கேள்விக்கு....... ஆக மொத்தம் நான் தனியா இருக்கனுமா இல்ல தனிச்சு இருக்கணும்மா,,,,?

    நாதன் என்னும் கதாபாத்திரம் நம் அனைவரின் உள்ளிலும் இருக்கிறது.... மிக சரியாக சொன்னால், நம் கலாச்சார கட்டமைப்பில் நம் அனைவருக்குமே.....Breathing space.. மறுக்கப்படுகிறது...... அது குறித்து தான் நாம் கோபம் கொள்கிறோம்.

    ///// நிரந்தர தனிமை தேடுபவன் மிருகமே... அது என்லைட்மெண்டே ஆனாலும் கூட……………..!!!!! போ.. தனியாக போய், தனக்குள் இரு... பின்னர் வா என்பதே மனித வாழ்க்கை என்பது என் ஸ்கூல் ஆப் தாட்.../////////

    சரியாத்தானே எழுதியிருக்கேன்....... நிரந்தர தனிமை கூடாதுங்கிறேன்... தனிமை தேடி.. போய் கண்டுபிடிச்சு.. வந்துரணும்.....

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை........உங்கள் வாழ்வுக்கு அவசியம் அர்த்தம் என கருதுவது எனக்கு உவப்பில்லாமல் இருக்கலாம்..... மாப்பிள்ளை உங்களுக்கு அவசியமானது எனக்கு ஒரு யூஸ் இல்லை... ஒரு வேளை ... ஹூம் இது எதுக்கு தேடுறார்........ என நான் கேட்கலாம்... அதே போல, என் தேவை அல்லது எனக்கு ஆச்சரியமானது உங்களுக்கு அவசியமானதா இருக்காது....

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம்... அதை தேடி கண்டு, தெளிந்து, வந்து விட வேண்டும்.... அதுதான் வாழ்க்கை.....

    ஆனால் நாம் என்ன செய்கிறோம்.. தனிமை தேடுவேன்.. தனிமை தேடுவேன்... என சொல்லி அந்த தனிமை தேடலிலேயே நின்று விடுகிறோம்... அங்கேயே இருக்கப்புடாதுங்கிறேன்....... அம்புட்டுத்தேன்....

    இது கொஞ்சம் ஆழமான விஷயம்............ 5 வொய் போட்டு உள்ளுக்குள்ள் போகணும்...

    இந்த Breathing space... breach அல்லது....... breathing space denial நடக்கும் போது....... மனிதனுக்குள் ஒரு இயலாமை வந்து விடுகிறது... அது ஆபத்தானது..... அதைத்தான் அடுத்த வரியில்........ சுய தேடல் மறுதலிக்கப்படும் போது, மதம் கொள்ளும் மடமை நம்முள் இருக்கிறது….

    அப்புறம் இயேசு பற்றி சொல்லும் போது...... ம்.... அது ஒரு நுண்ணிய உணர்வு... இறைமகனே... மனித இயலாமையில் உழலுகிற நேரம்...

    1. தெரிகிறது,... நன்றாக தெரிகிறது... தன் பாடுகள் பற்றியும் சிலுவை மரணம் பற்றியும்.... அதனால் தான் அதீத பயம் கொள்கிறார்.. உடல் நடுங்குகிறார்...... ரத்த வேர்வை வேர்க்கிறார்.
    2. உடன் இருந்து செபிக்காத சீடரிடம் கோபம் கொள்கிறார்.... ஒரு மணி நேரம் விழித்திருக்க கூடாதா என புலம்புகிறார்...
    3. தந்தையே இந்த விஷயம் எனக்கு வேண்டாமே என மன்றாடுகிறார்....

    ஆக இந்த தனிமை ஒரு பிரார்த்தனை மாத்திரமே........ இன்னும் சொல்லப்போனால் இந்த தனிமையில் ஆக்கபூர்வம் குறைவு... ஆனால் இன்னொரு தனிமை அவருக்கு எல்லா பலமும் தந்திருக்கிறது........... அது பாலைவனத்தில் செலவிட்ட 40 நாள் தனிமை.......

    அந்த் 40 நாட்களுக்கு பிறகு...... அவர் என்ன செய்தார்....... திரும்பி நம்மிடையே வந்தார் அல்லவா.............

    இப்ப சொல்லுங்க...... நான் சொன்னது ரைட்டுதான........

    பதிலளிநீக்கு