பக்கங்கள்

என் தமிழ் தப்பு பண்ணாது….

தமிழின் தலை நிமிர்வு

செம்மொழி என்று சொல்லப்பட்ட போது கூட அடையாத சந்தோசத்தை நான் இன்று பெற்றேன். தமிழ் என் தாய்மொழி என சொல்லி பெருமிதத்தால் நெஞ்சு நிமிர கண்கள் நனைந்தது.

இத்தனை வலுவானதா என் மொழி, என என் உணர்வு விம்மியது.................நடந்தது இதுதான்.

சமீபத்தில் ஒரு சந்திப்பில் அவர் சொன்னார். என் தமிழ் தப்பு பண்ணாது….

என்ன…என்ன….!!!! இந்த வார்த்தை பிரயோகம் மிகவும் விநோதமாக உள்ளதே…. ஏதோ அசட்டையாய் கேட்டுக் கொண்டிருந்த நான் எங்கோ சிக்கியிருந்த மனதை காதுகளுக்கு திருப்பி ஒலிகளை உள் வாங்கத் துவங்கினேன். கேட்பவற்றை பற்றிய சிந்தனையில் இப்போது மனம் இருந்தது.

அவர் சொன்னார்… ‘என் தமிழ் தப்பு பண்ணாது…. எனும் தீர்மானத்துடன் அணுகிய போது தான் என் ஆய்வு நிறைவை எட்டியது. சரி அப்படி என்ன ஆய்வு என்ற போது….

கிறிஸ்தவர்களின் இறை தூதர் பெயர் என்ன….
ஜீசஸ்….. 


ஆம்…. ஆங்கிலத்தில் ஜீசஸ்…. ஆனால் அவரை இஸ்லாம் சகோதரர்கள் ஈசா என அழைக்கிறார்கள்… தமிழில் இயேசு… அல்லது யேசு நாதர்…. அதெப்படி ஒருவருக்கு வெவ்வேறு பெயர்கள்… ஏன் இப்படி என அவர் யோசித்த போது நடந்ததையே அங்கு அவர் குறிப்பிட்டார்.

இயேசு என்பதே அவர் பெயர். சரி பின் ஜீசஸ் என எப்படி ஆனது.

இயேசு, வாழ்ந்த காலத்தில் அங்கு பேசப்பட்ட மொழி…… நகரிபலிது என்பதே. நகரிபலிதுவில் எழுதப்பட்ட இவ்வார்த்தையை லத்தினிலில் மொழி பெயர்க்கலாம் என லத்தீன் அறிஞர்கள் அமர்ந்த போது யே…. எனும் ஒலி அமைப்பு இல்லாததால் ஜே… எனும் ஒலி அமைப்பால் மொழி பெயர்த்து விட்டனர். அதுவும் போக, லத்தினிலில் எந்த ஒரு பற்பதத்தையும் ‘எஸ்’ எனும் எழுத்தில் முடிப்பது வழக்கம்… என்னதான் ‘எஸ்’ போட்டு எழுதினாலும்…. பின்னர் நம்மிடம் சொல்லுவார்கள்…. ‘எஸ்…. சைலண்ட் ஃப்ளீஸ்….’ என… 


பாருங்களேன்... பாரி எனும் ஊரை எழுதும் போது, லத்தின்காரர்.... எஸ்.... போட்டு எழுதிவிட்டு..... பின்னர் எஸ் சைலண்ட் ஃப்ளீஸ் என்றார்கள்... யெஸ்... யெஸ்... என சொல்லிவிட்டு... யார் கேட்டார்கள் அதை........... எஸ்!!!! சேர்த்து சொல்லி... நம்மவர்கள் எல்லாம் இன்றும் அதை பாரிஸ் எனத்தான் அழைக்கிறார்கள்....

எனவே யேசு என ஒலி எழுப்ப வேண்டிய பதம் ஜேசு என எழுதப்பட்டு…. எஸ் சைலண்ட் ஆக இருந்தது….

லத்தினிலில் எழுதப்பட்ட இந்த வார்த்தை பதத்தை ஆங்கிலிக்கன் முறைமையில் மொழிமாற்றம் செய்ய….. முயன்ற போது… எஸ்…. சைலன்ஸ் எல்லாம் மறந்து போய்….. ஜீசஸ் என ஆனது……
அடேயப்பா, ஒரு வார்த்தை எப்படி யெல்லாம் உருமாறி, உருவாகி இருக்கிறது… என சிந்திக்கும் போது வியப்பும் ஆச்சரியமும் படருவதை தவிர்க்க முடியவில்லை….


ஆனாலும் சரியான உச்சரிப்பில் தமிழில் அப்பெயர் அழைக்கப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது. அன்பரின்... என்னோட தமிழ் எப்பவும் தப்பு பண்ணாது எனச் சொல்லும் அன்பும் நம்பிக்கையும் என்னவோ செய்கிறது.

ஒலி ஒரு மொழியில் ஆற்றும் பங்கை நினைக்கும் போது அதன் வீரியமும் அவசியமும் புரிகிறது…. சில ஆதிவாசி பழங்குடியினரால் பேசப்படும் மொழிகள் ஏன் பரவலாக பேசப் படவில்லை… சில மொழிகள் மாத்திரமே பரவுகிறதே… அது ஏன் எனும் வினாவுக்கு கூட விடை கிடைக்கும் அந்த பாதை கண்ணுக்கு தெரிகிறது…. 

மொழி…. அதன் பணி குறித்த பரிமாணங்கள் விளங்குகிறது... 

ம்…. எது எப்படியோ….இப்போதும்… அடிக்கடி…. அந்த வார்த்தைகள் மட்டும்…. காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது… அதில் ஒரு சுகம் தெரிகிறது….

‘என் தமிழ் தப்பு பண்ணாது………….’

12 கருத்துகள்:

  1. yes. u r right..s..

    naan kudu ithu namma tamil MOOARAINGAR kalainger varathaiyooonnu payyanthu poittean...padukalli...

    Starting nalla irukku ungatta...finishing nalla illaye...ungatta.... Jesu...ESU ( Tamilna) Appa ESSA Yaru...

    ha ha

    பதிலளிநீக்கு
  2. ஹா…ஹா… தேங்க்ஸ்... செல்லா... உங்க நகைச்சுவை சூப்பரா இருக்குது.....

    பதிலளிநீக்கு
  3. அழகான ஆழமான அருமையான பதிவு !! என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு. இன்றைய உலக மொழிகளிலேயே மிகவும் பழமையானதும், (ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழிந்து சிதையா) சீரிளைமைத்திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதற்குரிய நம் தாய் மொழி தப்புப் பண்ணாது !!!

    பதிலளிநீக்கு
  4. அழகான ஆழமான அருமையான பதிவு !! இன்றைய உலக மொழிகளிலேயே மிகவும் பழமையானதும், (ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழிந்து சிதையாததும்) சீரிளைமைத்திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதற்குரிய நம் தாய் மொழி தப்புப் பண்ணாது !!! என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

    பதிலளிநீக்கு
  5. இப்பதிவில் தாங்கள் பயன்படுத்தியிருக்கும் படத்தை விட தமிழன்னையின் படத்தை பயன் படுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.
    http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9f/Tamil_Mother.jpg

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இப்பதிவில் தாங்கள் பயன்படுத்தியிருக்கும் படத்தை விட தமிழன்னையின் படத்தை பயன் படுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.
      http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9f/Tamil_Mother.jpg////

      மிக்க நன்றி... மிகச் சரியான தேர்வு... தாங்கள் சொன்னதை செய்து விட்டேன்...

      நீக்கு
  6. அன்பரே ! இதேபோல் இன்னும் சில.... யாக்கோபு -> Jacob; யோவான் -> John; எரேமியா -> Jeromiah; யோஷுவா -> Joshua; மோசே -> Moses; யூதா -> Judas;

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழமான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      ’மொழி வழி’
      ‘மொழி வழி - வழிமொழி’


      தாங்கள் ஏன் ஒரு ஆய்வுக் கட்டுரையோ, அல்லது புத்தகமோ எழுதக் கூடாது.

      தங்கள் ஆழமான கருத்துக்கள் எங்களை போன்ற பலரை சிந்திக்க தூண்டும். ஒரு வேண்டுகோளாகவும் விண்ணப்பமாகவும் வைக்கிறேன்... மொழி குறித்த பலம் பலவீனங்களையும் இது தொட்டு சென்றால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்...

      தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையில் தாங்கள் கோடிட்டு காட்டிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூட இதில் இணைக்கலாம்....

      இந்த பணியில் அடியேன் செய்யக்கூடிய ஏதேனும் பணி இருந்தால் மனமகிழ்ச்சியுடன் செய்வேன்....

      நீக்கு
  7. போஸ்கோ அந்தொணிராஜ்7 ஜூன், 2012 அன்று 6:17 PM

    லத்தீன் வழக்கம் பற்றியும் அதோடு பல அரிய தகவல்களையும் சேர்த்து கொடுத்த அறிஞனே, போற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி... போஸ்கோ அந்தொணிராஜ்

      பள்ளி பருவத்திலேயே... ஒரு முறை பார்த்த என் ஊரை வரைபடம் வரைந்து அன்பளிப்பாய் அளித்தவன் நீ..

      விளம்பரங்களை வைத்தே பல மொழி கற்று என்னை அசத்தியவன் நீ.....

      இப்போது கூட ...’என்ன பின் கோடு... 103.......ஆ... ம்... 600 சென்னையா இருக்காது... 603 ஆ இருக்கும்... திருப்போரூர் என என்னை திக்குமுக்காட வைத்த தகவல் களஞ்சியம் நீ...

      உன் அன்புக்கு நன்றி...

      நீக்கு
  8. தலீவரின் தமிழுக்கு தலை வணங்குகிறேன்....

    பாரி பாரிஸ் ஆன கதை அறிய நேர்ந்ததில் மகிழ்ச்சி.... படித்ததில் ஒரு சுவாரசியம்..

    கற்றறிந்தோர் சபையில், அவர்களின் உரையாடலை படிப்பதோடு முடிந்தது என் பணி..... பெரிதாய் பேச ஒன்றுமே இல்லை, ஏனெனில் இது பற்றி பேச நான் :

    பாடறியேன்.... படிப்பறியேன்...
    பள்ளிக்கூடம் நானறியேன்

    ஏடறியேன் எழுத்தறியேன்
    எழுத்து வகை நானறியேன்....

    வாழ்த்துகள் படுக்காளி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலீவா... தேங்க்ஸ் தலைவா....

      எளிமையாக அடக்கமாகவும் எழுதப்பட்ட பின்னூட்டத்துக்கு நன்றி.... தங்களின் புன்னை மரம், வல்லினம் மெல்லினம் புல்லினம், வாழ்க்கை, வெற்றியின் விழுதுகள் ............. பின் சித்தம், விதை .............. என விரியும் தங்களின் எழுத்துக்கு என்றுமே வியந்து மயங்கியிருக்கிறேன்.... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தங்கள் அன்புக்கும் நன்றி......

      நீக்கு