தீபாவளி…. பேர சொன்னதுமே சும்மா அதிருதில்ல…. யெஸ். மனசும் உணர்வும் இணைந்து ஒரு உற்சாக அனுபவம் பெருகிறது. இந்து, சமணம், சீக்கியம் என பல பிரிவுகளாலும், தீபங்களின் திருவிழா என எல்லா இந்தியராலும் உற்சாகமாக கொண்டாடப்படும் திருவிழா.
இந்த நல்ல நாளில் நாமனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். படம், பட்டாசு, பட்சணம் என பட்டய கிளப்புவோம். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
குடும்பமாய் இணைந்திருந்து, நல் உறவு ஏற்படுத்தி, அக்கம் பக்கம் சூழ அன்பாய் இந்த விழாவை கொண்டாடுவோம். நமக்குண்டான பிரிவுகளில் இருந்து விலகி, ஒற்றுமை தழைக்க கொண்டாட்டத்தில் கலந்திடுவோம்.
இந்த தீபாவளியை மாற்றம் தரும் திரு நாளாய் கொண்டாட வேண்டுமென்றால் தொடர்ந்து சிந்திக்கலாம், இல்லையா பட்டிமன்றமும், பந்தியும் தயாராக உள்ளது, அங்கே போயி விடுவோம் என முடிவெடுக்கலாம்,
நரகாசுர வெற்றி
இதுதானே சொல்லப்படும் கதை.
பூமித் தாய்க்கு பிறந்த நரகன், தன் வலிமையால் இந்த உலகை வென்றான், உலகம் அனைத்தையும் தன் கீழ் கொணர்ந்தான். தன் பேராசையால் வானுலகையும் தேவர்களையும் கூட வெல்ல நினைத்தான். அப்போதுதான் அவனை அழிக்க வேண்டிய கட்டாயம் வந்தது.
கிருஷ்ணரும் சத்ய பாமாவும் இணைந்து நரகாசுரனை எதிர் கொண்டனர். ஆவேசமாய் நரகாசுரன் போர் புரிந்தாலும், நம்ம கிருஷ்…!!!!, அன்புடனும் அனாயசத்துடனும் போர் புரிந்தார். கிளைமாக்சாக சுதர்சன சக்ரா எனும் ஆயுதத்தில் நரகாசுரன் வீழ்த்தப்பட்டான்.
காந்தி, மகாபாரதம் படித்து விட்டு சொல்வார். இது ஏதோ கதையாகவோ, புராணமாகவோ மட்டும் பார்க்க என்னால் முடியவில்லை. 100 சகோதரர்களை 5 ஆட்கள் கொல்வார்கள் என்பதெல்லாம் இதிகாசம் அல்ல, நம்மைப் பற்றி நமக்கு விளக்க ஏற்படுத்தப்பட்ட விளக்க சாரங்கள் (Metaphors) மட்டுமே என்பார்.
அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு மேலே கூறியுள்ள கதையை வாசித்தால், நரகாசுரன் நமக்குள் தான், கிருஷ்ணரும் நமக்குள் தான். போரும் நமக்குள் தான், வெற்றியும் தீபாவளியும் கூட நமக்குள் தான்.
நான் தான் வலியவன், என்னால் இந்த உலகை வெல்ல முடியும்…. என நினைத்து அதில் முயன்று வெற்றியும் பெற்றான் நரகன். உலகம் அவன் வசம் ஆனது. ஆனால் இறைவனையே வெல்ல முடியும் என நினைத்தான்…. வெற்றி பெற முடியாமல் அவன் தோற்றுப்போனான்….
உலகை வெல்லும் நம் அனைவரின் பயணத்திலும் இந்த அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நரகனாகி நாமும் நரகனாக வாழ வேண்டியிருக்கலாம்.
நரகனின் தொடக்கம் உலகை வெல்லும் வலுவில் ஒரு பயணம், ஒரு மூர்க்கமான பயணம்… உலகை வென்றதும், கைக்கு கீழே உலகம் வந்ததும், அதன் பின் வேறு ஒரு தேடல் தொடங்கும். இறை தேடலும் அதையும் வெல்லுவேன் என முயலுவதும் அடுத்த படி… இறைத்தேடல் தொடங்குவது இயல்பு என்றாலும். அந்த தேடலிலும் பலம் சேர்க்கவும், பரிமளிக்கவும் முயல்வது அன்றி, இறையின் இயல்பை பின்னுக்கு தள்ளிவிட்டு மனிதர்களை விட நான் மேலானவன் எனக் காட்ட சில பளபளப்புக்களையே விரும்புவோம்…
அந்த பலத்தில் மயங்காதும், வெற்றி பெற வேண்டும் என எண்ணாமலும் எளிமையை ஏற்றுக் கொண்டு பணிவுடன் இருக்க வேண்டிய அவசியம் நமக்கு நரகாசுரன் கதை வழியாக சொல்லப்படுகிறது.
இன்று சில நிமிடங்கள் இது குறித்து யோசிக்கலாம். சில எளிய செயல் திட்டம் தீட்டலாம். ஒரு மாற்றம் தரும்…., முடிவில்லா மகிழ்வு தரும்….. ஒரு சில போர்கள் செய்யலாம்.
1.
- உலகையே ஆழ்வேன் என சொல்லும் நரகனை நமக்குள் தேடுவோம்.
- 2. உலகை வென்ற பின், வானுலகை கூட விட்டுவைக்க மாட்டேன் என எகிறும் நரகனையும் நமக்குள் தேடுவோம்.
- 3. இந்த நரகனை அழிக்க, எந்த கிருஷ்ணரும், எந்த சத்ய பாமாவும் நமக்குள் இணைய வேண்டும் என தேடுவோம்
- 4. சுதர்சன சக்ரா எது என இனம் கண்டு கொள்வோம்….
- 5. உக்கிரமான அந்த போர் – தீபாவளி சண்டை…. எது என புரிவோம்
- 6. போரின் முடிவில், வெற்றியின் கொடி….. வரிசையாய் பூத்து நிற்கும் தீபங்களை நாடுவோம்.
தலீவா....
பதிலளிநீக்குசூப்பர் நரகன்... அவரை சூப்பர்மேன் என்று சொல்ல வைத்து விட்டீர்கள்...
நமக்குள் இருக்கும் நரகன் நம் எல்லோருக்கும் தெரிந்தவர் தான்... தினம் தினம் நம் வாழ்வில் பல சமயங்களில் எட்டி பார்த்து விட்டு தான் செல்கிறார்.. ஆனாலும் அவரை அடக்கவோ, தாண்டி செல்லவோ நாம் முயல்வதே இல்லை...
இன்று நம் வாழ்க்கையே ஒரு பெரிய போர் தான்... அதில் நாம் வெற்றி பெற வேண்டும்....
//// R.Gopi சொன்னது... இன்று நம் வாழ்க்கையே ஒரு பெரிய போர் தான்... அதில் நாம் வெற்றி பெற வேண்டும்....////
பதிலளிநீக்குதேங்க்ஸ் தலைவா... நச்சுன்னு சொன்னீங்களே..
போர்...
நமக்குள், நம்மால், நமக்காக, நாமே... போர் செய்யணுமோ...