பக்கங்கள்

ஆன்மீக அல்வா – (பகுதி – 2)

வாசக தோழமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. தங்களின் ஆதரவும் ஆலோசனையும் இத்தொடரின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் விளங்குகிறது.

உறுதுணை என்றதும் நம்ம உட்டாலங்கடி உன்னிகிருஷ்ணன் ஞாபகத்துக்கு வர்றார்.ஒரு நாள் உட்டாலங்கடி உன்னிகிருஷ்ணன் பேங்க்குக்கு போனாராம், உள்ள போயிட்டு அதே ஸ்பீடுல வெளிய ஓடி வந்து. உஸ். ஆ...ன்னு கைய உதறிகிட்டே ஓடி வந்தாராம்.

தடுத்து நிறுத்தி என்னங்க ஆச்சுன்னு கேட்ட்துக்கு. பணம் எடுக்க அக்கவுண்ட்ல கை விட்டேன், ஷாக் அடிச்சுருச்சுன்னாராம்.

அதென்னங்க இது அனியாயப்பட்ட ஊருல இப்படி எல்லாமா நடக்கும், இப்படி ஏன் ஷாக் அடிக்குது, நீங்க என்ன செஞ்சீங்கன்னதுக்கு. கரண்ட் அக்கவுண்ட்ல எக்குத் தப்பா கை விட்டுட்டேன்னு சொன்னாராம்.

அது மாதிரி தொட்டா டொமார்ன்னு ஷாக் அடிக்கிற சப்ஜெக்ட் ஆன்மீகம். அப்படி ஒரு ஆழமான சப்ஜெக்ட் எடுத்து தொடர் எழுதுறதுனால, சுர்ருன்னு சூட்டிப்பா இருக்குது அதோட கூட கொஞ்சம் யூஸ்...புல்லாவும் இருக்கு எனும் தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி. தங்கள் அன்புக்கு நன்றி கூறி, மன நிறைவுடன் நம் இரண்டாம் பகுதிக்கு செல்வோமா.

மக்கள் தொகை, சதவிகிதம் என ஜல்லியடித்த நம் முந்தைய பதிவு நமக்கு சொல்வது என்ன, மனித இனம் பூமி முழுதிலும் பரவி இருந்தாலும், ஒரு சில இடங்களில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் நெருக்கியும் இருக்கிறது. அப்படி இருக்க காரணம், சோறு கண்ட இடம் சொர்க்கமே என எங்கு குடிக்க தண்ணீரும், இருக்க இடமும் பாதுகாப்பும் கிடைக்கிறதோ அங்கு பட்டரை போட்டு பகுத்துண்பவனே மனிதன். ஒரு குடும்பமாய் சமூகமாய் அவன் கூடி கும்மியடிப்பது மனித இயல்பு.

இல்லேன்னு சொல்லாம, மனுசன இருக்கச் சொல்லுங்களேன் பார்ப்போம், ஒருத்தனா ஒத்தையா வாழு என்று, ஹூமும்... சான்ஸே இல்லை, ஒரே நாள்ல ஓடி வந்துருவான். ஆனா கேட்டா மட்டும் லீவ் மீ அலோன், தனிமையே இனிமை என ஆக்ட் கொடுப்பான். இது இன்று நேற்று அல்ல, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி என முழங்கிய கற்காலம் தொட்டு இருந்திருக்க வேண்டும்.

அப்படி, மக்கள் அதிகம் வாழும் இடத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் மிக அவசியம். அடுத்தவனுக்கு பாதகமில்லாமல் வாழ ஒரு நெறிமுறை நிச்சயம் வேண்டும். இப்படி ஒரு இடத்தில் ஒரு மதம் உருவாக்கப்பட்டால், பின்பற்றப்பட்டால் அதுதானே முண்ணனியில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. வேதாரணியத்துல இடி இடிச்சா, வெள்ளியங்கிரியிலா மழை பெய்யும்.

ஒரு மதம் வளர மரம் போல, மண்ணும், நீரும், உரமும் வேண்டும். அரசியல் வியாபாரம் கலாச்சாரம் என்பவையே இம்மரம் வளர காரணகர்த்தாக்கள். நம் வீட்டுல இருக்கிற பிள்ளை பெண்டுகள் மாதிரி மதங்களும் வளர்ந்து இருக்கும், ஏன் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இன்றைய நிலவரப்படி சில பேப்பர்களை புரட்டிப் பார்த்து அந்த தாள் தரும் தகவல்கள் அடிப்படையில் முக்கியமாய் நான்கு முன்னில் நிற்கிறது. இன்னும் ஒரு நூறு மதங்களும் நிலுவையில் உள்ளன என்றாலும். கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தமதம், ஹிந்துமதம், இவை நாலுதான் பெரும் கட்சிகள். இதுலயும் ஒரு சுவாரசியமான தகவல் உண்டு.

இருக்கிற நாலு மதமும் இரண்டே இடங்கள்ல இருந்துதான். ஒண்ணு இந்தியா, இன்னொன்னு வளைகூடா. ஆளுக்கு ஒரு ஜோடி மதம் உண்டாக்கியிருக்குது இந்த இரண்டு இடங்களும். அது ஏங்க எனும் கேள்வி கேக்கலாம், கேட்டு கிடைக்கிற விடையில் பெரிய சுவாரசியம் இல்லேங்கறதால, நெக்ஸ்ட்டுக்கு ஜம்புவோம்.

இவ்வாறாகத்தானே நம் மதங்கள் தமக்கே உரிய வீகத்தில் வளர்ந்தும் தேய்ந்தும் வருகிறது. என்றாலும் இந்த வளர்ச்சி / தேய்ச்சி விகிதம் என நாம் ஆராயும் போது, அவற்றின் தொடங்கிய இடமும், ஜனத்தொகையும் பக்கத்தில் வைத்து கொண்டே பார்ப்பது நல்லது. இல்லாமல் கூட அதன் கோட்பாடுகள், தன்மைகள், நம்பிக்கை எல்லாவற்றின் துணையுடன் பார்த்தல் நலம். இல்லையேல் தவறான பாதைக்கு நம் கணிப்பு கரை கடக்கும்.

சரி இக்கேள்விகளினூடே இம்மதங்களின் வயதென்ன எனவும் ஒரு துணைக் கேள்வி கேட்போமா. என்ன இருக்கும் மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 2 அல்லது 4 ஆயிரங்கள் இருக்கும்.அம்புட்டுதேன், எனும் போது அப்படி போடு அருவாள, ஏங்க நம்ம மனித இனத்தின் வயசு சில லட்சம் வருடங்கள் ஆச்சே. அப்போ இந்த மதங்களின் தோற்றத்துக்கு முன்னால என்னவா இருந்துச்சு என ஒரு சிந்தையும் வருகிறது.

அது வேற ஒண்ணுமில்லை, கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து ஸ்திரப்பட்டு நல்ல ஒரு நிலைக்கு வந்திருக்கிறது. இன்று நாம் கெட்டிக்கா பிடித்து கொள்ளும் மத நம்பிக்கைகள் இக்க்காலத்துக்கு முன்ன இல்லையா. நாம் அடித்து கொள்ளும், அடுத்தவனை வெடித்து கொல்லும் மதங்கள் நம் முன்னோர்களுக்கு முக்கியமாய் இல்லியோ...

எது எப்படியோ மதத்தின் பெயரால் ஒரு உடலோ, ஏன் மனமோ வெட்டுண்டால் அது மதம்தான்.

மதம் நம் வழிபாட்டில் மட்டுமல்லாது நம் உணவு வகைகளிலும் பழக்கங்களிலும் பக்காவாக இருக்கிறதே. பாய் ஆயிரம் சொல்லுங்க உங்க வீட்டு பிரியாணி பக்குவம் நமக்கு வர்ரதில்ல. அதைன்னவோ போங்க பிரியாணின்னா அது உங்களிதுதான், ஒரு பிடி பிடிச்சுறீங்க என்றவரை இவர் மடக்கிச் சொன்னார். சாமி உங்க வீட்டு புளியோதரையும் சக்கரைப் பொங்கலும் தேவாமிர்தம்யா. எனும் இருவரும் சொல்லுவார் நம்ம பீட்டர் வீட்டுல சாப்பிட்டோமே கேக்கு, அது கேக்குங்க, இன்னும் கொஞ்சம் கொடுன்னு கேக்க வைக்குது என்பார்.
நாம் ஒருவேளை அடுத்த வீட்டில் பொறந்திருந்தால், நம் உடை, உணவு, மொழி, எல்லாம் அல்லவா மாறியிருக்கும்.

வெற்று நெற்றியில் சேர்த்த புருவங்கள் ஒரு மார்க்கம் எனவும், மெயின் குங்குமத்துக்கு மேலாக்கா வகிடுல வைச்சிருக்கேன் பாத்துகிட்டியா....நான் கல்யாணம் ஆனவ எனும் சங்கேத மொழியும் மதங்கள் நம் வாழ்வில் ஆற்றும் பங்கு புரியுமல்லவா.

இன்று ஒரு தெளிவு பெற முடியுமா. மதம் இன்று விதைத்திருக்கும் விதம் விதை தெரிந்து நாம் விழித்து கொள்ள முடியுமா. நான் என்பது இந்த சமூகம் வரைந்த சித்திரம். உலகிற் சிறந்தது என் மதம்தான், நான் சார்ந்திருக்கும் மதம்தான் எனும் வாக்கியத்தின் வால்யூம் குறைத்து, நான் பெரிசும் இல்ல, நீ சிறிசும் இல்ல என சொல்ல முடியுமா,

எம்மதமும் சம்மதம் எனும் முழக்கம் அர்த்தமற்றது. அப்படியிருக்க சாத்தியமும் இல்லை, அவசியமும் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் வேண்டாம். நான் சார்ந்திருக்கும் மதம் நல்லதே எனும் தெளிவோடு, என் மதம் பெரிசும் இல்ல, உன்னோது சிறிசும் இல்ல என நினைக்க துவங்கினால் ஒரு மிக பெரிய மாற்றம் நிகழும்.

அம்மாற்றத்திற்கு நம்முள் உற்று நோக்கி நம் அடையாளங்களின் ஆணி வேருக்கு செல்ல வேண்டும். சக மனிதனை பார்த்து அவன் சங்கதிகள் புரிய வேண்டும்.

முடியுமா???? .... முடியும்மா !!!! .... முயன்றால்....

மதங்களின் மாண்பு புரிந்து நம்மை மாற்றினால் மாற்றம் நிகழும்.

தொடரும்...............

4 கருத்துகள்:

  1. படுக்காளி,

    கன ஜோரான ஆரம்பம். தொடர்ந்து எழுதுங்கள்.

    இந்தப் பதிவுகள்ல கார்ட்டூன்கள் ரொம்ப அமர்க்களமா இருக்கு. "மான்" கார்ட்டூனை ரொம்ப ரசிச்சேன்.

    எனக்கும் ஆன்மீக அல்வா கிண்டனும்னு ஆசை வந்திச்சி. பாருங்க: http://thabaal.blogspot.com/2010/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  2. ஒரு வினா !

    உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை பேர் மதத்தில் ஏறியுள்ளார்கள் ?

    பெரும்பான்மையான மக்கள் வாழும் சைனாவில் மதமில்லை..

    ரஷ்யாவில் பெரும்பான்மையாக மதமில்லை..

    கம்யூனிச பொதுவுடமைக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் நாடுகளில் மதம் பி(பீ)டித்த மனிதர்கள் குறைவு...

    மேலை நாடுகளில் பிறப்பால் - பெயருக்கு - மதமிருந்தாலும் மதஙகளைப் பின்பற்றுபவர்கள் மிகக் குறைவே..

    இந்தியாவில் ஒரு பெரிய மோசடி !!

    மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எந்த மதமும் இல்லாதவனை “இந்து” என முத்திரை குத்தி மதவாதி ஆக்கி விடுகிறார்கள் !!

    கருணாநிதி என்ற பகுத்தறிவுவாதி, ஜோதிபாசு என்ற பொதுவுடமைவாதி, மதம் என்றால் என்ன்வென்றே தெரியாத ஆதி திராவிடன், இவர்கள் யாருமே மதவாதிகள் இல்லை. ஆனால் மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு இவர்களுக்கும் மத முத்திரை குத்துகிறதே ஏன் ?

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஏ வி எஸ் . தங்கள் நேரத்திற்கும், ஊக்கம் தரும் அற்புத வார்த்தைகளுக்கு.

    கன ஜோர் என சுருக்கமாய் அழகாக சொல்லிவிடீர்கள். கனமான விசயங்களை வெகு ஜன தளத்துக்கு கொண்டு செல்லவே முயற்சிக்கிறேன்.

    நான் கூட, என்னடா கார்ட்டூன் ஐடியா சரியிலையோ, இவ்ளவு டைம் எடுத்து கார்ட்டூன் எல்லாம் போடுறோமே வேற எதாவது செய்யணுமோ என நினைசுருக்கேன்.தங்கள் சொல் கேட்டவுடன்; இல்லை இது சரிதான் என கன்பார்ம் ஆயிருச்சு. ரொம்ப தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  4. JoeBasker .... வருகைக்கும் தங்கள் பொன்னான நேரத்துக்கும் மிக்க நன்றி.

    JoeBasker சொன்னது…
    ///// ஒரு வினா, உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை பேர் மதத்தில் ஏறியுள்ளார்கள் ? பெரும்பான்மையான மக்கள் வாழும் சைனாவில் மதமில்லை..ரஷ்யாவில் பெரும்பான்மையாக மதமில்லை..
    கம்யூனிச பொதுவுடமைக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் நாடுகளில் மதம் பி(பீ)டித்த மனிதர்கள் குறைவு...
    மேலை நாடுகளில் பிறப்பால் - பெயருக்கு - மதமிருந்தாலும் மதஙகளைப் பின்பற்றுபவர்கள் மிகக் குறைவே.. ///

    மிக அற்புதமாக சொல்லி விட்டிர்கள். தாள்களின் தகவல் படி (UN) 90% மதம் சார்ந்தவர்கள் .

    ///// இந்தியாவில் ஒரு பெரிய மோசடி !!

    மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எந்த மதமும் இல்லாதவனை “இந்து” என முத்திரை குத்தி மதவாதி ஆக்கி விடுகிறார்கள் !!

    கருணாநிதி என்ற பகுத்தறிவுவாதி, ஜோதிபாசு என்ற பொதுவுடமைவாதி, மதம் என்றால் என்ன்வென்றே தெரியாத ஆதி திராவிடன், இவர்கள் யாருமே மதவாதிகள் இல்லை. ஆனால் மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு இவர்களுக்கும் மத முத்திரை குத்துகிறதே ஏன் ? ////

    நெத்தி அடி, மிக சரியாகவும் விரிவாகவும் ஆழமாகவும் கணக்கெடுப்பில் உள்ள குறைபாடுகளை பதித்திருகிர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு