பக்கங்கள்

கம்யூனிச கடுகு !!!! நேர் வினை.

நுனிப்புல் மேய்ந்து நான் செல்ல, ஆழமாக உழுது அக்கினிக் குஞ்சாய் சில வைரப் பூக்கள், நிமிர்ந்த நன்னடையில்/ எழுத்தில் மின்னுகிறது. தங்கள் பார்வைக்கு இதோ.

நன்றி: திரு. ஜோ பாஸ்கர்.

அருமையான பதிவு.

சோஷியலிசம், கம்யூனிசம் இரண்டுமே மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை தான்.இந்தியா ஒரு சோஷியலிசக் குடியரசு. திருவள்ளுவரின் திருக்குறள் சோஷியலிசத்தை அடிப்படையாகக் கொண்டவை. புத்தன் ஒரு பொதுவுடமைப் பிரியர்.

பெரியார் ஒரு கருப்புச்சட்டைக் கம்யுனிஸ்ட். அண்ணா ஒரு சோஷியலிசவாதி.புரட்சித்தலைவர் பாடல்களும் கொள்கைகளும் வசனங்களும் ஆட்சி நெறிமுறைகளும் சிந்தனைகளும் சோஷியலிச வெளிப்பாடுகள். பராசக்தி காலத்து கருணாநிதி பிச்சைக்காரர்களை மாளிகைக்கு கொண்டு வந்த பொதுவுடைமைவாதி. (இப்போது பழுத்த முதளாளித்துவவாதி).

இயேசு கிறிஸ்து முழுக்க முழுக்க ஒரு பொதுவுடைமைவாதி. பணக்காரனை சொத்து அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கச்சொன்ன புரட்சிக்காரர். ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைவதை விட பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினம் என்ற போராளி.

கோவிலிலே வியாபாரம் செய்தவர்களை சாட்டையால் பின்னியெடுத்த தீவிரவாதி.

தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .

சந்தேகமே இன்றி இயேசு கிறிஸ்து ஒரு பொதுவுடைமைவாதி.

படுக்காளிக்கும் ஆச்சிக்கும் ஒரு வேண்டுகோள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் பொதுவுடைமை கொள்கைக்குள் அடங்காத, எனக்கு புரியாத இரண்டு விடயங்களை தயவு செய்து விளக்குங்களேன்.

ஓன்று. "இருப்பவனுக்கு மேலும் கொடுக்கப்படும். இல்லாதவனிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும்" .

இரண்டாவது. ஊதியம் பற்றிய உவமை: முதலாளி காலையில் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மதியம் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மாலையில் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். நாளின் முடிவில் சம்பளம் வழங்கும் பொது எல்லோருக்கும் ஒரே சம்பளம் வழங்குகிறார்.

காலையிலிருந்தே வேலை செய்தவர்கள், மாலையில் வேலைக்கு வந்து சில மணி நேரங்களே வேலை செய்தவர்களும் தங்களைப் போன்றே சம்பளம் வாங்குவதை எதிர்த்து போர்குரல் எழுப்பும்போது சம்பளம் கொடுப்பது தனது விருப்பம் என்றும் காலையில் வேலைக்கு சேர்ந்தவர் ஒத்துக்கொண்ட சம்பளம் அவருக்கு கிடைக்கும் பொது அடுத்தவர் சம்பளத்தைப் பற்றி கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை இல்லை என்கிறார்.

இது காலையில் சேர்ந்தவருக்கு இழைக்கப்படும் அநீதியா ?
மாலையில் சேர்ந்தவருக்கு வழங்கப்படும் தாராளமா ?

1 கருத்து:

  1. // தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .//

    உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன், கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை பரப்ப சொன்னாரா? அவர்தான் இந்த மதத்தை தொடங்க சொன்னாரா? உங்கள் கருத்து எந்த அளவுக்கு சரி? நான் படித்த வரையில் அவர் கடைசி வரை யூதர் என்று தான் சொல்லபட்டிருந்தது எது உண்மை? அவரை தூற்றியவர்கள் தான் பின்னர் கட்சி மாறி அவற்றின் பெயரால் கிறிஸ்துவத்தை பரப்பினார்கள் என்பது எந்த அளவுக்கு சரி? தயவு செய்து விளக்கம் தரவும். ( இது விவாதத்திற்கு அல்ல உண்மையில் ஒரு கருத்து பரிமாற்றதிர்க்காகத்தான் கேட்கிறேன்)

    பதிலளிநீக்கு